நின்று) செய்த அருந்தவத்தால்; பேர் உவமை சால் செய்த - பெரிய உவமையாகஅமையும்படி பொருந்திய; செம்பொன் சீறடி - சிவந்த பொன்னணி அணிந்த சிறிய பாதங்களை;கைகளில் தீண்டினள் - தன் கைகளால் தொட்டாள். தாமரை பல காலம் நீரில் நின்று செய்த தவத்தால் இவள் அடிக்கு உவமையாகப் பெற்றது என்றுஅடியைப் புனைந்துரைத்தார். மகளிர்க்கு அடிசிறுத்திருத்தல் வேண்டுமென்பது உடற்கூற்றியல் நலம்உணர்ந்தார். கூற்று. கண், தோள், அல்குல் என மூவழிப்பெருகியும், நுதல், நுகப்பு, அடி எனமூவழிச் சிறுகியும் இருத்தல் வேண்டும், “அகல் அல்குல், தோள், கண் என மூவழிப் பெருகி, ஆதல், அடி, நுகப்பு என மூவழிச் சிறுகி” (கலித் . 108: 2-3) என்றது காண்க. இதனால் கைகேயிபேரழகி என்பதும் உணர்க. படுக்கையில் உறங்கியிருந்த கைகேயியைத் துயிலுணர்த்த வேண்டித் தொட்டாள்என்பதைத் தீண்டினள் என்றார். தீமை நிகழ்தற்காதாரமாகத் தொடுகின்ற தொடுகையைத் தீண்டல்என்பது வழக்கு, ‘பாம்பு தீண்டியது’ என்றாற்போல இங்கு கூனியைக் காலக்கோள்’ ஆகிய இராகு,கேது என்னும் பாம்பாகக் குறித்தாராதலின், அதற்கேற்பத் ‘தீண்டல்’ நயம் உடைய சொல்லாகிறது. ‘காலக் கோள்’ எப்தற்கு, உலகிற்குத் துன்பம் விளைக்கும் உற்பாதமாகிய ‘தூமகேது’போன்ற கோள்களைக் குறிப்பினும் அமையும் என்க. கூனியைப் பின்னர் ‘வெவ்விடம் அனையவள்’(1452) என்றதும் இதுபற்றியே என்க. 51 கூனியின் தொடக்கவுரை 1450. | தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள், நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்; மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை தூண்டிட, கட்டுரை சொல்லல் மேயினாள். |
தீண்டலும் - (கூனி ) காலைத் தடவிய அளவில்; உணர்ந்த - துயிலுணர்ந்த;அத்தெய்வக் கற்பினாள் - அந்தத் தெய்வத் தன்மை பொருந்திய கற்பினை உடைய கைகேயி; நீண்ட கண் - தன் நீண்டமைந்த கண்களில்; அனந்தரும் .- தூக்க மயக்கமும்;நீங்குகிற்றிலள் - (முற்றாக) நீங்கப் பெற்றாளில்லை; (ஆனால் அதற்குள்ளாகவே கூனி)மூண்டு எழு பெரும்பழி - மேலும் மேலும் மிக்கெழுகின்ற பெரும்பழியை; முடிக்கும் - உண்டாக்கி முடிக்கப் போகின்ற; வெவ்வினை - கொடிய வினையானது; தூண்டிட - (அவள்உள் நின்று அவளைப் பேசும்படி) ஏவுதல் செய்ய; கட்டுரை - பேச்சை; சொல்லல் மேயினாள்- பேசத் தொடங்கினாள். கணவன் கருத்துக்கு மாறுபடாதிசைந்த உள்ளம் உடையவள் என்பார் ‘தெய்வக் கற்பினாள்’ என்றார்;தன் நன்மை கருதாது உலக நன்மைகருதியவள் ஆதலின் எனலும் ஆம். தூக்கம் நீங்கு முன்னரே பேசத் தொடங்கினாள் |