என்றது கூனியின் உள்ளக் கொதிப்பின் விரைவைப் புலனாக்கும். ‘வினை தூண்டிட’ என்பது இராவணன்வினை, கைகேயி வினை, கூனி வினை என்று பலவாறாகக் கொள்ள நிற்கும் ஆதலின் பொதுவாகக் கூறினார். 52 1451. | ‘அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும் குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள்போல், பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும், உணங்குவாய் அல்லை; நீ உறங்குவாய்’ என்றாள். |
‘அணங்கு - வருத்துகின்ற; வாள் - கொடிய; விட அரா - விடப் பாம்பு ஆகிய இராகு; அணுகும் எல்லையும் - நெருங்கும் நேரத்திலும்; குணம் கெடாது- தன் தன்மை சிறிதும் மாறாமல்; ஒளி விரி - ஒளியை எங்கும் வீசுகின்ற; குளிர்வெண்திங்கள் போல் - குளிர்ச்சியையுடைய வெண்மையான சந்திரனைப் போல; பிணங்கு -மாறுபடுகின்ற; வான் பேர் இடர் - மிகப் பெரிய துன்பம்; பிணிக்க - (உன்னைவருத்திக் கட்ட; நண்ணவும் - நெருங்கி வரவும்; நீ உணங்குவாய் அல்லை - நீ(அதற்கு) வருந்துபவளாக இல்லை; ‘உறங்குவாய்’ - (நிம்மதியாகத்) தூங்குகின்றாய்;’ என்றாள். “ஒருபுடை பாம்பு பொளினும் ஒருபுடை, அங்கண்மா ஞாலம் விளக்குறூ உந் திங்கள் போல்” (நாலடி.148) என்றது போல இங்கும் திங்களைச் சொன்னார். இராகு திங்களை விழுங்கும் என்பது புராணிகர் கூற்று கைகேயிக்கு வரும் பேர் இடர், அவள் மாற்றாளாகிய கோசலை செல்வம் பெறுதலாம். உணங்குவாய்,உறங்குவாய் நிகழ்காலம் எதிர் காலமாயிற்று, கால வழுவமைதி. 53 கைகேயியின் மறு மாற்றம் 1452. | வெவ் விடம் அனையவள் விளம்ப, வேற்கணான், ‘தெவ் அடு சிலைக் கை என் சிறுவர் செவ்வியர்; அவ் அவர் துறைகொறும் அறம் திறம்பலர்; எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?’ எனா, |
வெவ்விடம் அனையவள் - கொடிய நஞ்சையொத்த கூனி; விளம்ப- இவ்வாறுசொல்ல; வேற்கணாள் - வேலையொத்த கண்ணையுடைய கைகேயி; ‘தெவ் அடு சிலைக் கைஎன் சிறுவர் - பகைவரை அழிக்கும் வில்லைப் பிடித்த கைகை உடைய என் புதல்வர்; செல்வியர்- நலமாய் இருக்கின்றனர்; அவ் அவர் துறை தொறும் - அவரவர்களுடைய தொழில்களில் எல்லாம்;அறம் திறம்பவர் - தருமத்திலிருந்து மாறுபடாதவர்கள்; (எனவே) ஈண்டு - இப்பொழுது; |