பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 83

எனக்கு; வந்து அடுப்பது - வந்து நேர்வது; எவ் இடர்? - என்ன
துன்பம்; எனா - என்று சொல்லி; (அடுத்த பாட்டில் முடியும்)

     பிறரால் தீங்கு வராது காக்கவல்லவர் ஆதலின் “தெவ்வடு சிலைக்கை”
யுடையவர்;  தாம் தீங்குநெறிகளிற் செல்லாதவர் ஆதலின் ‘அறம் திறம்பலர்;’
அதுவே துன்பம் எப்படி வரும்,  என்ன துன்பம் வரும் என்றாள் கைகேயி.
சிறுவர் என்பது நால்வரையும் குறித்தது.                           54

1453.‘பராவ அரும் புதல்வரைப் பயக்க, யாவரும்
உராவ அருந் துயரை விட்டு, உறுதி காண்பரால்;
விராவ அரும் புவிக்கு எலாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்றாள்.

     ‘பராவ அரும் - புகழ்தற்கு அரிய;  (நற்குணம் உள்ள) புதல்வரைப்
பயக்க -
புத்திரரைப் பெறலால்;  யாவரும் - எல்லோரும்;  உராவ அருந்
துயரைவிட்டு -
பிறரால்நீங்குதற்கரிய வலிய துன்பத்தை விட்டு; உறுதி
காண்பர் -
நற்கதி அடைவர்; விராவ அரும் புவிக்கு எலாம் -
ஒன்றோடொன்று கலவாத தனி வேறான உலகங்களுக்கு எல்லாம்;வேதமே
அன
- வேதத்தைப் போன்று விளங்குகின்ற; இராமனைப் பயந்த எற்கு -
இராமனைப்பெற்றெடுத்த எனக்கு; இடர் உண்டோ? - துன்பம்
உளதாகுமோ?;’ என்றாள் - என்றும்கூறினாள்.

     புத்திரரைப் பெற்றவர்கள் பிறரால் நீக்குதற்கரிய ‘புத்’ என்னும் நரகத்
துன்பத்திலிருந்தும் நீங்குவார்கள்; நற்கதி அடைவார்கள் என்று அனைவரும்
கூறுவர்; எல்லா உலகங்களுக்கும் வேதமே போல் விளங்கும் இராமனைப்
பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ என்று வினாவினாள்; மேற்பாட்டில்
சிறுவர் என்று நால்வரையும் பொதுவாகச் சொன்னவள் இப்பாட்டில்
இராமனைப் பிரித்துப் பாராட்டி அன்பினால் நெகிழ்ந்தாளாம். ‘ஆல்’
ஈற்றசை.                                                     55

கூனி ‘வாழ்ந்தனள் கோசலை’ எனலும், கைகேயின் வினாவும்  

1454.ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்,
சூழ்ந்த தீவினை நிகர் கூனி சொல்லுவாள்,
‘வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீந்தது;
வாழ்ந்தனள் கோசலை, மதியினால்’ என்றாள்.

     ஆழ்ந்த பேர் அன்பினாள்- (இராமன் பால்) ஆழங்காற்பட்ட
பேரன்பு உடையவளாய கைகேயி; அனைய கூறலும்- அத்தகைய
வார்த்தைகளைச் சொல்லுதலும்; சூழ்ந்த தீவினை நிகர் கூனி- (அவனைச்)
சுற்றிக் கொண்ட பாவத்தை யொத்த மந்தரை; சொல்லுவாள்- பேசத்
தொடங்கி; ‘நின் நலம் வீழ்ந்தது- உனது நன்மை அழிந்து போனது;
திருவும்- உன் செல்வமும்; வீந்தது- கெட்டது; கோசலை- உன்
மாற்றாளாய கோசலை; மதியினால்- புத்தித்