பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 97

 மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும், மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர், இடையறா இன்னல்.

     ‘அறன் நிரம்பிய - அறவாழ்வுக்குரிய நற்குணங்களால் நிறைந்த;
அருளுடை -கருணையுடைய;  அருந்தவர்க்கேனும் - செய்தற்கு அரிய
தவத்தைச் செய்த முனிவர்களுக்கும்;பெறல் அருந்திருப் பெற்ற பின் -
பெறுதற்கு அரிய செல்வத்தைப் பெற்ற பிறகு;  சிந்தனைபிறிது ஆம் -
எண்ணம் வேறுபடும்; (ஆதலால் இராமன் கோசலை முதலோர் அரச பதவி
பெற்றபிறகு) உமை - உங்களை;  மறம் நினைந்து - கொல்லுதல் கருதி;
வலிகிலர்ஆயினும் - துன்புறுத்தாமல் விட்டாலும்;  இறல் உறும்படி -
(நீங்களாகவே)சாகும்படி; மனத்தால் இடையறா இன்னல் இயற்றுவர் -
மனத்தால் கருதி இடையறாத துன்பத்தைச்செய்வார்கள்.

     கோசலை முதலியோர் இன்றைக்கு உங்களிடும் நட்பாக இருப்பதுபோல்
அரசபதவி பெற்றபிறகும்இருப்பார்கள் என்று கருதாதே,  கருவியால் நேரே
கொல்லாவிடினும், மனத்தால் துன்பத்தைச் செய்வர்; அது பொறாமல்
நீங்களாகவே இறந்தபடுவீர்கள். செல்வம் பெற்றபின் சிந்தை வேறாவது
முனிவர்க்கும் உள்ளது  என்றால்,  சாமானியர்களாய இவர்கள் அதற்கு
எம்மாத்திரம்? - என்பது கூனியின் வாதம், “என் சிறுவர் அறந் திறம்பலர்”
“இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ” (1452, 1453) என்று கைகேயி
கூறியதை அனுசரித்து, ‘இப்போது அப்படி நீ நினைக்கலாம்,  அரசன் ஆன
பிறகு எப்படியோ’ என்றுமறுத்து தன் கருத்தை வலியுறுத்தினாள்.
முன்னிரண்டு வரிகளின் செய்தியைப் பின்னிரண்டு வரிகள்பாதுகாத்து
நிற்கின்றன.                                                  78

1477. ‘புரியும் தன் மகன் அரசு எனின்,
     பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்கு
     உடைமைஆம்; என்றால்,
பரியும் நின் குலப்
     புதல்வற்கும், நினக்கும், இப் பார்மேல்
உரியது என், அவள்
     உதவிய ஒரு பொருள் அல்லால்!

     ‘தன் மகன் அரசு புரியும் எனின் -  தன் புதல்வன் அரசாளுவான்
ஆயின்;  பூதலம்எல்லாம் - இப்பூமி முழுவதும்;  விரியும்  சிந்தனை -
(பெற்றது  போதாது  என்றுமேலும் பெறவேண்டும் என்று) அகன்று
செல்லும் மனத்தை உடைய; கோசலைக்கு - கோசலா தேவிக்கு; உடைமை
ஆம் -
சொந்தமாகிவிடும்; என்றால்-; நின்பரியும் குலப் புதல்வற்கும் -
உன்னிடத்து  அன்புடைய சிறந்த புத்திர