பக்கம் எண் :

மராமரப் படலம்117

4. மராமரப் படலம்

     இராமபிரான் ஏழு மராமரங்களை ஓர் அம்பால் துளைத்த செய்தியைக்
கூறுவதால் இது மராமரப்படலம் எனப் பெயர் பெற்றது.

     சுக்கிரீவன் இராமனை அழைத்துச் சென்று ஏழு மராமரங்களுள் ஒன்றை
அம்பொன்றால் எய்யுமாறு வேண்டினான்.  மராமரங்கள் அளக்கலாகாப்
பருமையும், உயர்வும் கொண்டு விளங்கின.  இராமன் மரங்களின் அருகில்
சென்று, வில்லில் நாணேற்றி, அம்பு தொடுக்க, அஃது ஏழு மரங்களையும்
துளைத்து இராமனிடம் திரும்பியது.  சுக்கிரீவன் மகிழ்ந்து இராமனைப் போற்ற,
வானர வீரர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

     இராமனின் வில்லாற்றலை இப்படலத்தில் காணலாம்.

மராமரங்களுள் ஒன்றைஅம்பினால் எய்யுமாறு இராமனை வேண்டுதல்

கலித்துறை

3865. 'ஏகவேண்டும் இந் நெறி' என,
     இனிது கொண்டு ஏகி,
'மாகம் நீண்டன குறுகிட
     நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று
     உருவ, நின் அம்பு
போகவே, என்தன் மனத்து இடர்
     போம்' எனப் புகன்றான்.

     இந்நெறி ஏகவேண்டும் என -(சுக்கிரீவன்) 'இவ்வழியாகச் செல்ல
வேண்டும்' என்று சொல்லி; இனிது கொண்டு ஏகி - (இராமலக்குவரை)
இனிமையாக அழைத்துச் சென்று;நீண்டன மாகம் -'நீண்டதான ஆகாயமும்;
குறுகிட நிமிர்ந்தன -
குறுகித் தோன்றுமாறு உயர்ந்துள்ளனவாகிய;மரங்கள்
-
மராமரங்கள்;ஐந்தினோடு இரண்டின் ஆக -ஏழாக உள்ளனவற்றில்;
ஒன்று உருவ -
ஒன்றைத் துளைக்குமாறு;நின் அம்பு போகவே -உனது
அம்பொன்று சென்ற அளவில்;என்தன் மனத்து -எனது மனத்திலுள்ள;
இடர் போம் -
துன்பம் போகும்;எனப்புகன்றான் -என்று சொன்னான்.