பக்கம் எண் :

122கிட்கிந்தா காண்டம்

வன் -பழமையான அண்டங்களை முன்னே படைத்தளித்த பிரமனுடைய;
உலகின் அங்கு -
சத்தியலோகமாகிய அவ்விடத்தில்;அவன் ஊர் - அவன்
ஏறிச் செல்கின்ற;ஓதிமம் - அன்னப்பறவை;தனிப் பெடையோடும்- தனது
ஒப்பற்ற பெடை அன்னத்தோடு;புடை இருந்து உறைவ - அம்மரங்களின்
ஒரு பக்கத்தே இருந்து வாழ இடமாவன.

     வேதங்களின் சாகைகள் அழிவற்றனவாயும், அளவற்றனவாயும் இருத்தல்
போல மரங்களின் கிளைகளும் அழிவற்றும், அளவற்றும் விளங்குகின்றன
என்றார்.  சாகை என்னும் சொல்லிற்கு வேதங்களின் கிளைப் பகுதி,
மரக்கிளை, என்றும் பொருள்கள் உள்ளன.  ஆதலால் 'சாகைகள் தழைக்கின்ற
செயலால் வேதமென்னத் தகுவன' என்றார்.  செம்மொழிச் சிலேடை அணி
பொருந்தியது.  விசும்பின் - இன் எல்லைப் பொருளது.  பிரமனுக்குரிய
அன்னப் பறவை தங்கிய இடம் என்றதால் அம்மரங்கள் பிரமலோகத்திற்கும்
மேல் உயர்ந்து வளர்ந்திருந்தன என்பதாம்.  இஃது உயர்வு நவிற்சி அணி.  7

3872.நாற்றம் மல்கு போது, அடை,
     கனி, காய், முதல் நானா
வீற்று, மண்தலத்து யாவையும்
     வீழ்கில, யாண்டும்
காற்று அலம்பினும்; கலி
     நெடு வானிடைக் கலந்த
ஆற்றின் வீழ்ந்து போய், அலை
     கடல் பாய்தரும் இயல்ப;

     காற்று அலம்பினும் -காற்று அசைத்தாலும்;நாற்றம் மல்கு போது-
நறுமணம் மிக்க மலர்களும்;அடை கனி காய் முதல் -இலைகளும்,
பழங்களும், காய்களும் முதலிய;நானா வீற்று யாவையும் -பலவகைப்பட்ட
அனைத்தும்;மண் தலத்து -மண்ணுலகில்;யாண்டும் வீழ்கில -
எவ்விடத்திலும் விழாதனவாய்;கலி நெடு வானிடை-ஆரவாரத்தை உடைய
பெரிய வானுலகத்தில்;கலந்த -பொருந்திய;ஆற்றின் வீழ்ந்து போய் -
ஆகாய கங்கையில் விழுந்து (அதன் வழியாகச்)  சன்று;அலைகடல்
பாய்தரும் -
அலைகளை உடைய கடலில் சேர்கின்ற;இயல்ப-தன்மையை
உடையன.

     இதனால் அம்மரங்கள் ஆகாய கங்கையினும் உயர்ந்துள்ளன என்றவாறு;
உயர்வு நவிற்சி அணி.  நாற்றம் - இங்கு நறுமணம்; ஆறு - ஆகாய கங்கை.
'நறுமணம் மிக்க மலர், இலை, கனி, காய் முதலிய பல்வகைப்பட்ட அனைத்தும்
எக்காலத்தும் வெவ்வேறு மண்டலங்களில் வீழ்வன அல்ல; காற்றடித்து
வீழ்ந்தாலும் ஆரவாரமுடைய ஆகாயத்தில்  பொருந்திய ஆகாய கங்கையில்
விழுந்து கடலைச் சேர்வன' என்றும் இப்பாடலுக்கு விளக்கம்கூறுவர்.     8

3873.அடியினால் உலகு அளந்தவன்
     அண்டத்துக்கு அப்பால்