யைச் சுமக்கின்ற;சேடன் - ஆதி சேடன் என்னும் பாம்பின்;வெள்ளி வெண் படம் -வெள்ளி போன்ற வெண்மையான படத்தை;குடைந்து - துளைத்துக் கொண்டு;கீழ் போகிய -கீழே ஊன்றிச் சென்ற;வேர - வேர்களை உடையன. பாற்கடலைக் கடைந்து அமுதைத் தான் கொள்ளாமல் தேவர்களுக்கு அளித்தவன் ஆதலின் 'வள்ளல்' என, சிறப்பிக்கப்பட்டான். இருபொருள்பட 'வயிர்ப்பு' என்னும் சொல்லைக் கையாண்டு, 'வாலி சுக்கிரீவர் மனத்தில் வயிரம் வளர்த்துக் கொண்டது போல மரங்கள் உள்ளே வயிரத்தன்மை பெற்றன எனக் கூறியதால் இது செம்மொழிச் சிலேடையுடன் கூடிய உவமை அணியாகும். சேடன் - யாவும் அழிந்த போதும் தான் அழியாது எஞ்சி நிற்பவன், காரணப்பெயர், மரங்களை வருணித்த கவிஞர், தாம் சொல்லும் கதைப் பகுதியையேஉவமையாக்கினார். 10 3875. | சென்று திக்கினை அளந்தன, பணைகளின்; தேவர், 'என்றும் நிற்கும்' என்று இசைப்பன; இரு சுடர் திரியும் குன்றினுக்கு உயர்ந்து அகன்றன; ஒன்றினும் குறுகா; ஒன்றினுக்கு ஒன்றின் இடை, நெடிது யோசனை உடைய. |
பணைகளின் -கிளைகளால்;சென்று - (அம்மரங்கள்) வளர்ந்து போய்;திக்கினை அளந்தன -எல்லாத் திசைகளையும் அளந்தன;என்றும் நிற்கும் என்று -எக்காலத்தும் அழியாமல் நிற்பவை என்று;தேவர் - தேவர்களால்;இசைப்பன -சொல்லத்தக்கன;இருசுடர் -சூரிய சந்திரர்; திரியும் குன்றினுக்கு- வலம் வரும் மேருமலையை விட;உயர்ந்து, அகன்றன -உயர்ந்தும், அகன்றும் விளங்கின;ஒன்றினும் குறுகா -ஒரு வகையிலும் குறைவு படாதன;ஒன்றினுக்கு ஒன்றின் இடை -ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையிலே;நெடிது யோசனை உடைய- பல யோசனை தூரம் இடைவெளி உள்ளவை. உயர்ந்தும் பரந்தும் வளர்ந்த மரங்கள் நெருக்கமாக இன்றி இடைவெளி விட்டு வளர்ந்திருக்கின்றன. திக்கினை அளந்தன என்பதற்குத் திசைகளின் எல்லை அளவும் பரந்துள்ளன என்பது பொருள். யோசனை ஓரெல்லை அளவைக் குறிக்கும். நான்கு காததூரம் என்றுகூறுவர். 11 இராமன் நாண் எறிந்து, அம்பு செலுத்துதல் 3876. | ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று, அமலன், தூய வார் கணை துரப்பது ஒர் ஆதரம் தோன்ற, |
|