பக்கம் எண் :

துந்துபிப் படலம்133

5.  துந்துபிப் படலம்

     வாலியால் கொல்லப்பட்ட துந்துபி என்னும் அரக்கனின் உலறிய
உடம்பை இராமன் ஏவலால் இலக்குவன் கால் விரலால் உந்திய செய்தியை
இப்படலம் உரைக்கிறது.  மயன் மைந்தனாகிய துந்துபி வாலியிடம் வலிந்து
சென்று போரிட்டு மாண்டான்.  வாலி அவன் உடலை வீசி எறிய, அது
ருசியமுக மலையில் மதங்க முனிவர் இருக்கையருகே விழுந்தது.  தாம் வாழும்
இடம் மாசுற்றதாகக்கருதி வாலிக்கு அம்முனிவர் சாபமளிக்க வாலி அதனால்
அவ்வெல்லைக்கு வர இயலாமல் போயிற்று.  சுக்கிரீவனுடன நட்புக் கொண்ட
இராமன் மராமரங்கைதை துளைத்த பின்னர் அவ்வரக்கனது எலும்புக்
கூட்டருகே வந்தனர்.  சுக்கிரீவன் துந்துபியின் வரலாற்றைக் கூற, இராமன்
ஏவ இலக்குவன் தன் கால் விரலால் அவ்வுடலை உந்தினான்.  அது
பிரமலோகத்தை அடைந்து திரும்பி வந்து விழுந்தது.  இலக்குவனுடைய
திறமையினையும் இப்பொழுது கண்டதால் வானரக் கூட்டம் பெரிதும்
மகிழ்ந்தது.

துந்துபியின் வறண்ட உடலைப் பார்த்து, இரரமன் வினவுதல்

கலிவிருத்தம்

3886.அண்டமும், அகிலமும் அடைய,
     அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும்
     பசை வறந்திடினும், வான்
மண்டலம் தொடுவது, அம்
     மலையின்மேல் மலை எனக்
கண்டனன், துந்துபி, கடல்
     அனான், உடல்அரோ!

     நெடும்பசை வறந்திடினும் -மிக்க ரத்தப்பசை வற்றியிருந்தாலும்;
அண்டமும் -
அண்ட கோளங்களும்;அகிலமும் -(அவற்றில் அடங்கிய)
எல்லா உலகங்களும்;அடைய -ஒருங்கே;அன்று -அந்நாளில் (ஊழி
முடிவில்);பண்டு-முன்னே;அனலிடை-ஊழித் தீயில்பட்டு;வெந்து அன-
வெந்தாற் போன்றதும்;வான் மண்டலம் தொடுவது -ஆகாய
மண்டலத்தைப் போய்த் தொடுவதுமான;கடல் அனான் துந்துபி உடல் -
கடல் போன்றவனான துந்துபி என்னும் அரக்கனின் உடல்;அம்மலையின்
மேல் -
அந்த ருசியமுக மலையின் மீது;மலை