என- மற்றொரு மலை போல் கிடப்பதை;கண்டனன் -இராமன் கண்டான். ஊழிக்கால இறுதியில் அண்டங்களும் உலகங்களும் வெந்ததை ஒத்தும், மலையின் மேல் மற்றொரு மலை இருப்பது போன்றும், வான மண்டலத்தைத் தொட்டும் கடல்போல் பரந்தும் துந்துபியின் உடலின் எலும்புக்கூடு கிடந்தது என்க. பசை வறந்திடினும் தோல், நிணம், தசை முதலியவற்றுடன் இருந்த நிலையில் அரக்கன் உடலின் பருமனும், உயரமும், வலிமையும் எங்ஙனம் இருக்குமோ என்பதை உணர வைத்தது. 'பசை வறந்திடினும்' என்னுந் தொடர் மத்திம தீபமாய் முன்னும் பின்னும் இயையும். துந்துபி - துந்துபி என்னும் பேரிகை போல் பெருமுழக்கம் செய்பவன். ஆரவாரம், பெருமை, கருமை காரணமாகத் துந்துபிக்குக் கடல் உவமைஆயிற்று. 1 3887. | 'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ் வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன் என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா, அன்பு உலப்பு அரிய நீ, உரை செய்வாய்' என, அவன், |
இது - இந்த வறண்ட உடல்;தென்புலக் கிழவன் -தெற்குத் திசைக்குத் தலைவனான யமன்;ஊர் மயிடமோ - வாகனமாக ஏறிச் செலுத்துகின்ற எருமைக் கடாவோ?திசையின் வாழ் -திசைகளில் வாழ்கின்ற; வன்பு உலக் கரி -வலிமை பொருந்திய கல் போன்ற யானைகளுள் ஒன்று; மடிந்தது கொலோ -மடிந்து கிடக்கிறதோ? மகர மீன் -மகரம் என்னும் பெரிய மீன்;உலப்பு உற -இறந்து படி;என்பு உலர்ந்தது கொலோ - அதன் எலும்பு உலர்ந்து கிடக்கின்றதோ?எனா -என்று வியந்து;அன்பு உலப்பரிய நீ- 'அன்பு குறைவுபடாதவனாகிய நீ;உரை செய்வாய் - சொல்வாய்;என -என்று (இராமன் கேட்க);அவன் -அந்தச் சுக்கிரீவன். . . 'அவன்' என்னும் சுட்டுப் பெயர் பதினான்காம் பாடலில் 'உரை செய்தான்' என்பதனோடு முடியும். மகரம் - சுறா எனும் மீன். இது மரக்கலத்தையும் கவிழ்க்க வல்லது. உலம் திரண்டகல்; கொலோ - கொல் ஐயப்பொருள் இடைச்சொல். துந்துபியின் எலும்புக் கூட்டைப் பல வகையாய் ஐயயேமற் கொண்டு கூறியதாதலின் ஐய அணியின் பாற்படும். 2 துந்துபியின் வரலாறு 3888. | 'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான், |
|