பக்கம் எண் :

துந்துபிப் படலம்135

 மந்தரக் கிரி எனப்
     பெரியவன், மகர நீர்
சிந்திட, கரு நிறத்து
     அரியினைத் தேடுவான்.

     மீது இந்துவைத் தொட -மேலே (வானில்) உள்ள சந்திரனைத்
தொடும்படியாக;நிமிர்ந்து எழு -மேலெழுந்து வளர்ந்துள்ள;மருப்பு
இணையினான் -
இரண்டு கொம்புகளை உடையவனும்;மந்தரக்கிரி எனப்
பெரியவன் -
மந்தர மலை போன்ற பெரிய உருவத்தை உடைய வனுமான;
துந்துபிப் பெயருடை -
துந்துபி என்னும் பெயருடைய;சுடு சினத்து
அவுணன் -
தீப்போல் சுடுகின்ற கோபத்தை உடைய அசுரன்;மகர நீர்
சிந்திட -
கடலில் உள்ள நீர் சிதறும் படியாக;கரு நிறத்து அரியினை -
கரிய நிறத்தை உடைய திருமாலை;தேடுவான் -தேடிச் சென்றான்.

     முன் பாடலில் 'மயிடமோ' என்றதாலும் இங்கு 'மருப்பிணையினான்'
என்றதாலும் 'துந்துபி' எருமை வடிவினன் என்பது புலனாகும்.  'மகரநீர்
சிந்திட' என்றதால் கடலைக் கலக்கிக் கொண்டு தேடினான்' என்பது
பெறப்படுகிறது.  எருமையின் இயல்பிற்கேற்ப நீரைக் கலக்கினான் என
அறியலாம்.           3

3889.'அங்கு வந்து அரி எதிர்ந்து,
     ''அமைதி ஏன்? '' என்றலும்,
''பொங்கு வெஞ் செருவினில்
     பொருதி'' என்று உரைசெய,
''கங்கையின் கணவன், அக்
     கறை மிடற்று இறைவனே
உங்கள் வெங் கத வலிக்கு
     ஒருவன்'' என்று உரை செய்தான்.

     அங்கு -அவ்விடத்தில்;அரி வந்து எதிர்ந்து -திருமால் எதிரில்
வந்து;அமைதி என் என்றலும் -'நீ இங்கு வந்த காரணம் யாது' என்று
வினவிய அளவில்;பொங்கு வெஞ் செருவினில் -சீற்றம் கொண்டு
செய்கின்ற கொடிய போரில்;பொருதி என்று உரை செய் -'என்னோடு
போர் செய்வாயாக என்று துந்துபி கூற;கங்கையின் கணவன் - (அதற்குத்
திருமால்) 'கங்கா தேவியின் கணவனான;அக்கறை மிடற்று இறைவனை -
நஞ்சுண்டதால் கறுத்த கண்டத்தை உடைய அந்தச் சிவபெருமானே;உங்கள்
வெம்கதம் வலிக்கு -
உங்ககளப் போன்றவர்களின் கோபமிக்க வலிமைக்கு;
ஒருவன் -
போரிடக்கூடிய ஒருவன் ஆவான';என்று உரை செய்தான் -
என்று உரைத்தான்.

     வாலியால் துந்துபி கொல்லப்படவேண்டும் என்பது ஊழ்வினையாதலால்,
திருமால் அவனொடு போர் செய்து கொல்லாது இங்ஙனம் கூறினார் எனக்