பக்கம் எண் :

136கிட்கிந்தா காண்டம்

கொள்க.  கங்கையைச் சிவபிரான் தன் தலையில் கொண்டமையால்
'கங்கையின் கணவன்' எனப்பட்டான். இறைவனே ஏகாரம் பிரிநிலை.      4

3890.'கடிது சென்று, அவனும்,
     அக் கடவுள்தன் கயிலையைக்
கொடிய கொம்பினின் மடுத்து
     எழுதலும், குறுகி, ''முன்
நொடுதி; நின் குறை
     என்?'' என்றலும், நுவன்றனன்அரோ,
''முடிவுஇல் வெஞ்செரு, எனக்கு அருள்
     செய்வான் முயல்க!'' எனா,

     அவனும் கடிது சென்று -அந்த அரக்கனும் விரைந்து சென்று;
அக்கடவுள் தன் கயிலையைக் -
அந்தச் சிவபிரானின் கைலை மலையை;
கொடிய கொம்பினின் -
தன் கொடிய கொம்புகளால்;மடுத்து எழுதலும் -
முட்டிப் பாய்ந்து எழுகையில்;முன் குறுகி -(சிவபிரான்) அவன் எதிரில்
வந்து; நின் குறை என் -''உனக்கு வேண்டுவது என்ன?நொடிதி -
சொல்வாய்'';என்றலும் -என்று கேட்டதும்;எனக்கு - (துந்துபி) 'எனக்கு;
முடிவுஇல் வெஞ் செரு -
முடிவு இல்லாத கொடிய போரினை;அருள்
செய்வான் முயல்க -
அளிக்க முயல்வாயாக;எனா நுவன்றனன் - என்று
சொன்னான்.

     'என்னோடு இடைவிடாது போர் செய்ய வேண்டும்'.  என்று துந்துபி
தான் வந்த காரணத்தைச் சிவபிரானிடம் அறிவித்தான்.             5

3891. ''மூலமே, வீரமே
     மூடினாயோடு, போர்
ஏலுமே? தேவர்பால் ஏகு''
     எனா, ஏவினான் -
''சால நாள் போர் செய்வாய்
     ஆதியேல், சாரல்; போர்
வாலிபால் ஏகு'' எனா - வான்
     உளோர் வான் உளான்.

     மூலமே -(அது கேட்ட சிவபிரான்) பண்டு தொட்டே;வீரமே
மூடினாயோடு -
வீரச் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு;போர்
ஏலுமே -
போரிடுவது முடியுமா? (முடியாது);தேவர் பால் ஏகு -(ஆதலால்)
நீ தேவர்களிடம் போர் செய்யப் போவாயாக;எனா ஏவினான் -என்ற
சொல்லி அனுப்பினான்;வான் உளோர் வான் உளான் -(அவனும் சென்று
தேவர்களைப் போருக்கு அழைக்க) அந்தத் தேவலோகத்தில் உள்ள
தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்;