சால நாள்-(துந்துபியிடம்) 'நீ நீண்டகாலம்;போர் செய்வாய் ஆதியேல்- போர் செய்ய விரும்புவாயாயின்;சாரல் -இங்கு வராதே;போர் வாலி பால் ஏகு -போர் செய்வதில் வல்ல வாலியிடம் செல்வாய்;எனா -என்று. . . . எனா என்பது அடுத்த பாடலில் 'விட' என்பதோடு முடியும். ஏலுமே - ஏகாரம் எதிர்மறை. சிவபிரான் துந்துபியைத் தேவர்களிடம் அனுப்பப் தேவர் தலைவனாம் இந்திரன் அவனை வாலியிடம் அனுப்பிவைத்தான். 6 3892. | 'அன்னவன் விட, உவந்து அவனும் வந்து, ''அரிகள்தம் மன்னவன்! வருக! போர் செய்க!'' எனா, மலையினைச் சின்ன பின்னம் படுத்திடுதலும், சினவி, என் முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், |
அன்னவன் விட -அத்தேவேந்திரன் அனுப்பிவிட;அவனும் உவந்து வந்து -அந்தத் துந்துபியும் மகிழ்ந்து கிட்கிந்தைக்கு வந்து;அரிகள் தம் மன்னவன் -குரங்குகளுககு அரசனே!வருக போர் செய்க -வந்து என்னோடு போர் செய்வாயாக;எனா -என்று சொல்லிக் கொண்டு; மலையினை -அம்மலையை;சின்ன பின்னம் படுத்திடுதலும் -பலவாறு நாசப்படுத்துகையில்;என் முன்னவன் சினவி -என் தமையனான வாலி சினங் கொண்டு;முன்னர் வந்து -எதிரில் வந்து;அனையவன் முனைதலும் -அந்த அசுரனோடு போர் செய்த அள வில். . . . 'முனைதலும்' என்பது அடுத்த பாடலில் வரும் 'உணர்ந்திலர்' என்பதனோடு முடியும் அன்னவன் - அகரச்சுட்டு அடியாக வந்த சொல். தேவேந்திரன் சொற்படியே துந்துபி வாலியிடம் சென்று போருக்கு அழைக்க இருவரும் போர் புரியலாயினர் என்பதாம். 7 3893. | 'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்;எவ்உலகினும், வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்; மருவஅருந்தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். |
|