இருவரும்-வாலி, துந்துபி ஆகிய இருவரும்;திரிவுறும் பொழுதின் - இடசாரி, வலசாரியாகச் சுழலும் போதில்;இன்னவர்கள் என்று- இவர்கள் இன்னார் என்று;ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் -எவரும்சிறிதும் அறிந்திலர்;எவ் உலகினும் -எந்த உலகிலும்;வெருவரும் தகைவு இலர் - (எவரைக் கண்டும்) அஞ்சும் தன்மையில்லாத இவர்கள்;விழுவர் -கீழே விழுவார்கள்;நின்று எழுவர் -(மீண்டும்) எழுந்து நிற்பார்கள்;தானவர் - அசுரர்களும்;வானவர்கள் தாம் -தேவர்களும்;மருவ அருந்தகையர் - அருகே நெருங்கவும் முடியாத தன்மையினர் ஆயினர். இன்னவர்கள் என்று சிறிதும் உணர்ந்திலர்கள் - இவன் தான் வாலி, என்றும் இவன் தான் துந்துபி என்றும் அறிய முடியாமையை உணர்த்திற்று. அவ்விருவரின் உருவத்தின் பெருமையாலும் போரிடும் வேகத்தாலும் இட, வலமாகச் சுழல்வதாலும் அடையாளம் தெரிந்திலது. உணர்ந்திலர்கள் - விகுதி மேல் விகுதி (அர், கள்). துந்துபியின் இனத்தவர் ஆதலின் 'தானவர்' முன்னர்க் கூறப்பட்டனர். 8 3894. | 'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம் போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை; தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும், சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். |
அடித்தலம் எடுத்திடுதலால் - (அவர்கள்) கால்களைத் தூக்கி வைத்ததால்;தீ விசும்புற எழுந்தது -நெருப்பு வானத்தை அடையுமாறு மேலெழுந்தது; முழக்கு -(அவர்கள் செய்த) ஆரவாரம்;நெடுந்திசை எலாம் போய் -நீண்ட திசைகளெங்கும் சென்று;எழுந்தது -ஒலித்தது;புகை - (அந்நெருப்பின்) புகையும்;உடன் எழுந்தது -கூடவே பரவிற்று;தோய நல் புணரியும் -நீரினை உடைய நல்ல கடலும்;தொடர் தடங்கிரிகளும்- பெரிய மலைத் தொடர்களும்;சாய் அழிந்தன -அழகு கெட்டன. தீ - அடிகள் படுவதால் ஏற்படும் உராய்வில் நிலத்தினின்று எழுந்தது. கடலும் மலையும் தன் நிலை கெட்டன என்பதால் போரின் கடுமை புலனாகும். தோயம் - நீர். 'எழுந்தது' என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால் இப்பாடல் சொற்பொருள்பின் வருநிலையணிஅமைந்தது. 9 3895. | 'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில், கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும் |
|