பக்கம் எண் :

துந்துபிப் படலம்141

தவிர -மற்றும் எல்லா மேலிடங்களையும் கடக்கும்படி;வயிர வன்
கரதலத்து -
உறுதியான வலிய கையினால்;மேல் வலிந்து எறிய -
(அவ்வரக்கனை) மேலே வலிமையோடு வீச;அன்று -அப்பொழுது;உயிரும்
விண் படர -
அவன் உயிர் மேலுலகத்திற்குச் செல்ல;இவ்வுடலும் -இந்த
உடலும்;இப்பரிசு -இவ்விதமாயிற்று.  (கீழே விழுந்து இங்கே கிடந்தது).

     ''வாலி துந்துபி உடலை மேலே வீசி எறிய, அவன் உயிர் பிரிய, உடல்
கீழே விழுந்தது என்றான்.  வான மண்டலங்கள் பலவற்றைக் கடந்து
வீசப்பட்ட உடல் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.                  13

3899.'முட்டி, வான் முகடு சென்று
     அளவி, இம் முடை உடற்
கட்டி, மால் வரையை
     வந்து உறுதலும், கருணையான்
இட்ட சாபமும், எனக்கு
     உதவும்' என்று இயல்பினின்,
பட்டவா முழுவதும்,
     பரிவினால் உரைசெய்தான்.

     இம்முடை உடற்கட்டி-இந்த முடை நாற்றமுடைய இவ்வுடற் பிண்டம்;
வான் முகடு முட்டிச் சென்று -
ஆகாயத்தின் உச்சியைத் தாக்கிச் சென்று;
அளவி -
அங்குப் படிந்து;மால் வரையை -பெரிய இந்த மலையை;வந்து
உறுதலும் -
வந்து அடைந்ததால்;கருணையான் -கருணை மிக்கவரான
மதங்க முனிவர்;இட்ட சாபமும் -(வெகுண்டு வாலிக்குக்) கொடுத்த சாபமும்;
எனக்கு உதவும் என்று -
எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கின்றது'
என்று;இயல்பினின் -இவ்விதமாக;பட்டவா முழுவதும் -நடந்த வரலாறு
முழுமையும்;பரிவினால் உரை செய்தான் -அன்பொடு சொன்னான்
(சுக்கிரீவன்).

     மால்வரை - சுக்கிரீவன் தங்கியிருக்கும் ருசியமுகமலை.  வாலி எறிந்த
துந்துபி உடல் ருசியமுகமலையில் மதங்க முனிவர் தவஞ்செய்து கொண்டிருந்த
ஆசிரமத்தில் விழுந்து அதன் தூய்மையைக் கெடச் செய்ததால் முனிவர்
வாலிமேல் சினங்கொண்டு சாபமிட்டார்.  வாலி இம்மலைப்பகுதிக்கு வரின்
தலை வெடித்து இறக்கக்கடவன் என்பதும், அவனைச் சேர்ந்த நண்பர்கள்
வரின் கல்வடிவமாகக் கடவர் என்பதும் அவரிட்ட சாபமாகும்.  மதங்க
முனிவர் வாலிக்கு இட்ட சாப வரலாறு, முன் இராமனுக்கு அனுமன் உரைத்த
(3851) பாடலாலும் அறியக் கிடக்கும். இங்ஙனம் அவ்வெலும்பின்
வரலாற்றையும், தான் அம்மலையில் வாழும் காரணத்தையும் சுக்கிரீவன்
இராமனுக்கு உரைத்தான்.                                       14

இலக்குவன் தந்துபின் உடலை உந்துதல்

3900.கேட்டனன், அமலனும்,
     கிளந்தவாறு எலாம்,