பலர்க்கும் அச்சத்தை விளைவிக்கும் மலையாதலின் 'மருண்ட மாமலை' எனப்பட்டது. 'குறவரும் மருளும் குன்றம்' என்பது மலைபடுகடாம். (275). யானையின் சீற்றம் வழிச்செல்வார்க்குப் பாதையை அரிதாக்கிவிடுகிறது என்றாலும், அம்மலைப்பகுதியிலுள்ள அகில், சந்தனம், தேன் என்ற வளமே உணர்த்தப்படுகிறது. யானைகள் சீற்றம் கொள்வதால் மரங்கள் முறிந்து விழுந்தன; மரங்கள் விழுவதால் தேன் கூடுகள் சிதைந்தன; அவை சிதைந்ததால் தேன் ஒழுகி வழிகள் வழுக்கல் உடையனஆயின. 5 | 3940. | மினல் மணிக் குலம் துவன்றி, வில் அலர்ந்து, விண் குலாய், அனல் பரப்பல் ஒப்ப, மீது இமைப்ப, வந்து அவிப்பபோல் புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் - இனைய வில் தடக் கை வீரர் ஏகுகின்ற குன்றமே. |
வில் தடக்கை வீரர் -வில்லேந்திய பெரிய கைகளையுடை (இராமலக்குவராகிய) வீரர்கள்;ஏகுகின்ற இனைய குன்றமே -ஏறிச் செல்லும் இவ்வியல்பினதாகிய மலை;மினல் மணிக்குலம் - மின்னுதலையுடைய இரத்தினங்களின் தொகுதி;துவன்றி -நிறைந்து;வில் அலர்ந்து -ஒளி பரப்பி;விண்குலாய் -விசும்பளவும் பொருந்தி;அனல் பரப்பல் ஒப்ப -நெருப்பைப் பரவச் செய்தல் போல;மீது இமைப்ப - அம்மலை மீது ஒளி வீச;வந்த அவிப்ப போல -(அந்நெருப்பை விரைந்து) வந்து அவிப்பன போல;புனல் பரப்பல் ஒப்பு இருந்த -நீரைச் சொரிந்து பரப்புதலை ஒத்து இருந்த;பொன் பரப்பும் என்பர் -பொன் ஒளியைப் பரவச் செய்யும் என்று கூறுவர். அம்மலைகளில் இரத்தினங்கள் நெருப்புப்போல ஒளிவீச, அந்நெருப்பை அவிக்கும் நீர்போலப் பொன்னொளி வீசும். இது தொடர்பு நவிற்சி அணியில் வந்த தற்குறிப்பேற்றஅணி. மினல் : மின்னல் - இடைக்குறை; பொன்னும், மணியும் நிறைந்து, பொன்னொளி தன்னுள் மணிகளின் ஒளியைத் தன்னிலடக்கி மேற்பட்டு விளங்கும் மலை வளம்கூறப்பட்டது. 6 | 3941. | மருவி ஆடும் வாவிதோறும் வான யாறு பாயும், வந்து; இருவி ஆர் தடங்கள்தோறும் ஏறு பாயுமாறுபோல், அருவி பாயும்; முன்றில், ஒன்றி யானை பாயும்; ஏனலில், குருவி பாயும்; ஓடி, மந்தி கோடு பாயும் - மாடு எலாம். |
|