அடைந்ததைப் பார்த்து;யான் -நான்;அது தயிர் எனக் கடைந்து - அதனைத் தயிர் கடைவது போல் கடைந்து;அவர்க்கு அமுதம் தந்தது - அவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்த செயல்;மறக்கல் ஆவதோ - மறக்கக்கூடியது ஆகுமோ? (ஆகாது). மயில் இயல், குயில்மொழி - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அண்மைவிளி, மறக்கல் ஆவதோ? - வாலி கடல் கடைந்து அமுதளித்த பெருஞ்செயலைத் தாரை அறிந்ததே; எனவே, 'நீ மறக்கக்கூடியதா' எனத் தாரைக்கு உரைத்தனன். இச்செயலை உலகத்தார் மறக்கக்கூடியதா? என்று உலகினர் மறக்கமுடியாத அருஞ்செயலைச் செய்வதன் வாலி என்பதை நிறுவினன் எனவும் கொள்ளலாம் - ஆவதோ - ஓகாரம் எதிர்மறை. 27 | 3962. | 'ஆற்றல் இல் அமரரும், அவுணர் யாவரும், தோற்றனர்; எனையவர் சொல்லற்பாலரோ? கூற்றும், என் பெயர் சொலக் குலையும்; ஆர், இனி மாற்றவர்க்கு ஆகி வந்து, எதிரும் மாண்பினார்? |
ஆற்றல் இல் அமரரும் -வலிமையில்லாத தேவர்களும்;அவுணர் யாவரும் -அசுரர்கள் எல்லோரும்;தோற்றனர் -தோற்றுப் போனவர்கள்; எனையவர் -எத்தனை பேராவர்;சொல்லற்பாலரோ? -(என்று) சொல்லும் தன்மையர் ஆவரோ?கூற்றும் -யமனும்;என் பெயர் சொல -என் பெயரைப் பிறர் சொல்லக் கேட்டால்;குலையும் -நடுங்குவான். மாற்றவர்க்கு ஆகிவந்து -(அதனால்) எனது பகைவனான சுக்கிரீவனுக்குத் துணையாகி வந்து;எதிரும் மாண்பினார் -என்னைப் போரில் எதிர்க்கும் திறமையுடையவர்;இனி ஆர் -இனியார் உள்ளனர்? (ஒருவரும் இலர்). வாலி தன் வீரமிகுதியைத் தாரைக்கு உரைத்தனன். தேவர்களையும், அசுரர்களையும், யமனையும் அஞ்சுமாறு செய்யும் அவனை எதிர்க்கக்கூடியவர் எவரும் இரார் என்பதால் 'எதிரும் மாண்பினார் ஆர்?' எனத் துணிந்து பேசினான். கூற்றும் - உயர்வு சிறப்புஉம்மை. 28 | 3963. | 'பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை ஊதிய வரங்களும், உரமும், உள்ளதில் பாதியும், என்னதால்; பகைப்பது எங்ஙனம்? நீ, துயர் ஒழிக!' என, நின்று கூறினான். |
பேதையர் -(எனது வலிமையை உணராத) அறிவில்லாதவர்;எதிர்குவர் எனினும் -என்னை எதிர்த்துப் போர் புரிவார்கள் என்றாலும்;பெற்றுடை - அவர்கள் அடைந்துள்ள;ஊதிய வரங்களும் - |