நிமித்தமாக;மலைக்கல் உற்றார் -போர் செய்யத் தொடங்கிய வர்களுமான அவ்வாலி, சுக்கிரீவர்;சிந்து ஓடு அரிஒண்கண் -சிதறிப் பரந்த செவ்வரி உடைய ஒளிமிக்க கண்களையுடைய;திலோத்தமை காதல் - திலோத்தமை மீதுகொண்ட காதலால்;செற்ற -பகைத்துப் போர் செய்த;சுந்த உபசுந்தப் பெயர் -சுந்தன், உபசுந்தன் என்னும் பெயர்களை உடைய; தொல்லையினாரும் -பழைய அசுரர்கள் இருவரையும்;ஒத்தார் -ஒத்தனர். சுக்கிரீவன் மனைவி உருமை, வாலியால் வலிதில் கொள்ளப்பட்டமை காரணமாகவும் போர் நடைபெறுவதால் 'மடமங்கை பொருட்டு' என்றார். 'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம், அருமருந்ததையும் அவன் விரும்பினான்' (3852); 'ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன்'' என்ற சொல் தரிக்குமாறு உளதோ? (3854) 'அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியை, பெருமை நீங்கினை (4043) என்ற அடிகளைக் காண்க. இச் செய்யுளில் முதல் இரண்டு அடிகளும் வாலி, சுக்கிரீவர்களுக்கும், சுந்தோப சுந்தர்க்கும் பொருந்தும் வகையில் சிலேடைப் பொருளில் அமைந்திருப்பது நோக்கற்பாலது. ஸு ந்த + உபஸு ந்த = ஸு ந்தோப ஸு ந்தர் என்றாயது வடமொழிப் புணர்ச்சி; 48 | 3983. | கடல் ஒன்றினோடு ஒன்று மலைக்கவும், காவல் மேருத் திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும், சீற்றம் என்பது உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும், கண்டிலாதேம், மிடல், இங்கு, இவர் வெந் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம். |
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் -கடல்கள் ஒன்றோடொன்று எதிர்த்துப் போர்செய்யவும்;காவல் மேருத்திடல் ஒன்றினோடு ஒன்று - நிலவுலகத்தைப் பாதுகாக்கும் மேருமலை இரண்டு உருப்பெற்ற ஒன்றோடொன்று;அமர் செய்யவும் -போர் செய்யவும்;சீற்றம் என்பது - சினம் என்னும் குணம்;இரண்டு ஆகி உடல் கொண்டு -இரண்டு ஆண் வடிவம் கொண்டதாகி;உடற்றவும் -ஒன்றோடொன்று போர் செய்யவும்; கண்டிலாதேம் -பார்த்திராத நாங்கள்;இங்கு -இவ்வுலகில்;மிடல் இவர் வெந்தொழிற்கு -வலிமை பொருந்திய வாலி சுக்கிரீவர் செய்யும் கொடிய போர்த்தொழிலுக்கு;ஒப்புரை வேறு காணேம் -உவமை கூற வேறு அறியோம். கடலொடு கடல் மோதுதலும், மேருமலை ஒன்றினோடொன்று போர் செய்தலும், சீற்றம் என்பது இரண்டு வடிவாகி மலைதலும் உளவாயின் வாலி சுக்கிரீவர் கடும்போர் செய்தற்கு ஒப்புமையாகும் என்பது கருத்து. இல்பொருள் உவமை அணி. வாலி, சுக்கிரீவர்களின் தோற்றத்திற்கு உவமைகள் கூறி, அவர்கள் போர்ச் செயலுக்கு உவமைகூற இயலவில்லை எனக் கூறிய நயம் காண்க. மேரு மலை, நிலவுலகம் அசையாவண்ணம் நடுவே நுழைக்கப்பெற்ற இருப்புச் சலாகை |