பக்கம் எண் :

206கிட்கிந்தா காண்டம்

3990. எடுப்பர் பற்றி; உற்று ஒருவரை
      ஒருவர் விட்டு எறிவர்;
கொடுப்பர், வந்து, உரம்;
      குத்துவர் கைத்தலம் குளிப்ப;
கடுப்பினில் பெருங் கறங்கு
     எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர்; பின்றுவர்; ஒன்றுவர்;
      தழுவுவர்; விழுவர்.

     எடுப்பர் பற்றி -ஒருவரை ஒருவர் பிடித்துத் தூக்குவர்; ஒருவரை
ஒருவர் -
ஒருவர் மற்றொருவரை;உற்றுப் பற்றி-நெருக்கிப் பிடித்து;விட்டு
எறிவர் -
உயரத் தூக்கி வீசி எறிவர்;வந்து உரம் கொடுப்பர் -(அங்ஙனம்
வீசி எறியப்பட்டவர்) தாமே வந்து எதிரிக்குத் தம் மார்பைக் காட்டுவர்;
கைத்தலம் குளிப்பக் குத்துவர் -
(அவ்வாறு காட்டிய மார்பில்) மூடியகை
புதையும்படி குத்துவார்கள்;கடுப்பினில் பெருங்கறங்கு என -விரைவுடன்
பெரிய காற்றாடி போல;சாரிகை பிறங்கத் தடுப்பர் -வலசாரி, இடசாரி
முறைகள் விளங்க ஒருவரை ஒருவர் மேற்சொல்ல விடாமல் தடுப்பார்கள்;
பின்றுவர் -
(விசையொடு தாக்குதல் பொருட்டு) பின்வாங்குவார்கள்;
ஒன்றுவர் -
இருவரும ஒன்றி நிற்பர்.  தழுவுவர் விழுவர் -தழுவிக்
கொண்டு கீழே விழுவார்கள்.

     சாரிகை - வட்டமாக வளைந்தோடுதல்.  பின்றுதல் - தாக்குவதற்காகப்
பின் வாங்குதல்.                                                56

3991.வாலினால் உரம் வரிந்தனர்,
      நெரிந்து உக வலிப்பர்;
காலினால் நெடுங் கால்
     பிணித்து உடற்றுவர்; கழல்வர்;
வேலினால் அற எறிந்தென,
      விறல் வலி உகிரால்,
தோலினால், உடன் நெடு வரை
      முழை எனத் தொளைப்பர்.

     வாலினால் உரம் வரிந்தனர் -ஒருவரையொருவர் தம் வாலினால்
மார்பினை இறுகப் பிணித்தவராய்;நெரிந்து உக வலிப்பர்-(எலும்புகள்)
நொறுங்கிப் பொடியாகும்படி இழுப்பர;காலினால் நெடுங்கால் பிணித்து -
தம் கால்களால் மற்றவர் நீண்ட கால்களை மாட்டி;உடற்றுவர் -இழுத்து
வருத்துவர்;கழல்வர் -பின் அப்பிடிப்பினின்று கழன்று வெளிப்படுவர்;
வேலினால் அற எறிந்தென -
வேற்படையினால் உடலைத் தைக்குமாறு வீசி
எறிந்தது போல;விறல் வலி உகிரால் -மிக்க வலிமை உடைய நகங்களால்;
தோலினால் உடல் -
தோலால் மூடப்பட்ட உடம்பினை;நெடுவரை முழை
என -
பெரிய