பக்கம் எண் :

298கிட்கிந்தா காண்டம்

8.  அரசியல் படலம்

     இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் பற்றிய அறிவுரைகளைக் கூறும்
பகுதியை முதன்மையாகக் கொண்டு விளங்குவதால் இப்படலம் 'அரசியல்
படலம்' எனப்பட்டது.  பால காண்டத்தில் தசரதனின் ஆட்சியைப் பற்றிக்
கூறும் பகுதியும் 'அரசியல் படலம்' எனப் பெயர் கொண்டது.

     சுக்கிரீவனுக்கு முடிசூட்ட இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிட,
முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன கொணருமாறு இலக்குவன் அனுமனுக்கு
உரைத்தனன்.  அங்ஙனமே அனுமன் கொணர, இலக்குவன் சுக்கிரீவனுக்கு
முடி சூட்டினான்.  நல்லரசு புரிதற்கு வேண்டிய அறிவுரைகளை இராமன்
சுக்கிரீவனுக்கு எடுத்துரைத்தான்.  அவற்றைச் செவிமடுத்த பின் சுக்கிரீவன்
இராமனைக் கிட்கிந்தைக்கு அழைக்க, இராமன் மறுத்து, 'நான்கு திங்கள்
சென்றபின் படையொடு வருக' எனக் கூறினன்.  அதனை ஏற்ற சுக்கிரீவனும்
விடைபெற்று நீங்கினான்.  தன்னை வணங்கிய அங்கதனுக்கும் இராமன்
அறிவுரை புகன்றான்.

     மாருதி இராமனுடன் இருந்து பணி செய்ய விரும்புவதாகக் கூற,
அவனையும் கிட்கிந்தை செல்லுமாறு இராமன் பணிக்க, மாருதியும் போனான்.
இராமலக்குவர் வேறொரு மலையை அடைந்தனர். கிட்கிந்தையில் சுக்கிரீவன்
செம்மையாக ஆட்சி புரிந்தான்.  அங்கதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிச்
சுக்கிரீவன் இனிதாக வாழ்ந்து வந்தான்.

சுக்கிரீவனுக்கு முடி சூட்டுதல்

கலிவிருத்தம்

4115. புதல்வன் பொன் மகுடன் பொறுத்தலால்,
முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான்,
உதவும் பூமகள் சேர, ஒண் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான்.

     புதல்வன் -தன் மகனான சுக்கிரீவன்;பொன் மகுடம் பொறுத்
தலால்-
(அன்று) பொன்னாலாகிய மணி முடியைத் தரிக்கப் போவதால்;
முதல்வன் -(தந்தையான) சூரியன்;பேர் உவகைக்கு முந்துவான் -
(அதைக் கண்டு)பெரிதும் மகிழ்ச்சி அடைவதற்கு முற்பட்டவனாய்;உதவும்
பூமகள் சேர -
(அந்த முடிசூட்டு விழாவிற்கு) உதவியாகின்ற திருமகள் வந்து
சேரும்படி;ஒண்மலர்க் கதவம் -(அவள் உறைவிட மான) சிறந்த தாமரை
மலர்களின்இதழ்களாகிய கதவுகளை;செய்ய