ஆன்றவற்கு -(எல்லாப் பண்புகளும்) நிறைந்தவனான சுக்கிரீவனுக்கு; உரியது ஆய அரசினை -உரியதான அரசாட்சியை;நிறுவி -நிலைபெறச் செய்து;அப்பால் -அதற்குப் பிறகு;எனக்கு உரியது ஆய கருமமும் - எனக்கு ஆகவேண்டியதான காரியத்தையும்;ஏன்று -ஏற்றுக் கொண்டு; இயற்றற்கு ஒத்த சான்றவர் -செய்வதற்குத் தகுந்த பெரியோர்;நின்னின் இல்லை -உன்னை விட (வேறு எவரும்) இல்லை;ஆதலால் -ஆதலால்; தருமம் தானே போன்ற நீ -அறமே உருவெடுத்தாற் போன்ற நீ;யானே வேண்ட -நான் வேண்டுகின்றபடி;அத்தலைபோதி -அவ்விடத்திற்குச் (சுக்கிரீவனிடம்) செல்லக் கடவாய்;என்றான் -என்று உரைத்தான். முன்னிரு பாடல்களில் அனுமனின் பொய்யாமை, அன்பு, பொறுமை, அறிவு ஆகிய பண்புகள் போற்றப்பட, இப்பாடலில் தருமத்தின் வடிவமென அனுமனைக் குறித்தல் காண்க. 'நல் அற வீரன்' (5541) எனப் பின்னரும் கூறுதல் காண்க. தருமத்தின் வடிவமான இராமனால் 'தருமன் தானே போன்ற நீ' என அனுமன் போற்றப்படல் எண்ணிஇன்புறற்பாலது. 30 அனுமன் கிட்கிந்தை செல்ல,இராமலக்குவர் வேறோர் மலையை அடைதல் 4145. | ஆழியான் அனைய கூற, 'ஆணை ஈது ஆயின், அஃதே, வாழியாய்! புரிவென்' என்று வணங்கி, மாருதியும் போனான்; சூழி மால் யானை அன்ன தம்பியும், தானும் தொல்லை ஊழி நாயகனும், வேறு ஓர் உயர் தடங் குன்றம் உற்றார். |
ஆழியான் - சுதரிசனம் என்னும் சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரமான இராமன்;அனைய கூற -அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல;மாருதியும் -(அது கேட்டு) அனுமனும்;வாழி -(இராமனை நோக்கி) வாழ்வாயாக!ஆணை ஈது ஆயின் -உன் கட்டளை இது வாயின்; அஃதே புரிவென் -நான் அதனையே செய்வேன்;என்று வணங்கிப் போனான் -என்று சொல்லி வணங்கி கிட்கிந்தையை நோக்கிச் சென்றான், தொல்லை ஊழி நாயகனும் -பழமையான பல ஊழிக்காலங்களுக்கும் தலைவனான இராமபிரானும்;சூழிமால் யானை அன்ன தம்பியும் - முகபடாத்தை உடைய பெரிய யானையை ஒத்த தம்பி இலக்குவனும்;தானும் - தானுமாக;வேறு ஓர் உயர் தடங்குன்றம் -உயர்ந்த பெரிய வேறோர் மலையை;உற்றார் -அடைந்தனர். அனுமன் இராமன் கட்டளையை ஏற்று விடைபெற்றதும் இராமனும் தம்பியுடன் வேறோர் மலையை அடைந்தான். இந்த மலையைப் பிரசிரவண மலை |