பக்கம் எண் :

320கிட்கிந்தா காண்டம்

என்று வான்மீகமும் அத்யாத்ம இராமாயணமும் கூறும். இதற்கு மாலியவான்
என்ற பெயருமுண்டு.  வாழியாய் - இராமனை 'வாழி' என அனுமன்
வாழத்தினான் என்பர்.  அடியவனாகிய அனுமன் இவ்வாறு வாழ்த்துவது
முறையா என்றால், பக்தர்கள் அன்பு மேலீட்டால் அங்ஙனம் வாழ்த்துவது
மரபாகும்.  பெரியாழ்வார் திருமாலுக்குப் பல்லாண்டு கூறியதும்,
பிள்ளைத்தமிழ்களில் பாட்டுடைத் தலைவனாகிய இறைவனுக்குக் காப்புக் கூறி
வாழ்த்துவதும் இம்மரபை ஒட்டியே ஆகும். இறைவனை வாழ்த்துவதால்,
வாழ்த்துவார் நல் வாழ்வு பெறுவர் என்பதை 'வாழ்த்துவதும் வானவர்கள் தான்
வாழ்வான்' (திருவாசகம், திருச்சதகம்-20)  என்ற அடியால் உணரலாம்.
அரசனுடன் பேசுகையில் 'வாழ்க' என வாழ்த்திப் பேசும் மரபை
இலக்கியங்களில் காணலாம்.  'சூழியானை' என்பது நாட்டு யானையைக்
குறிக்கும்.  காட்டில் திரியும் யானை போலன்றி, ஒரு பாகனுக்கு அடங்கி
நடப்பது சூழியானை.  அதுபோல் இலக்குவனும் அண்ணன் கட்டளைக்கு
அடங்கி நடப்பவன் என்ற கருத்தும் புலனாகிறது.  ஊழிநாயகன் தம்பியும்
தானும் உற்றான் - தலைமை பற்றி வந்த திணை வழுவமைதி.  ஆழியான்
என்னும் சொல் கடல் போன்றவன், பாற்கடலில் பள்ளி கொள்பவன் என்னும்
பொருள் படும் வகையில் அமைந்துள்ள சிறப்பையும் காணலாம்.         31

சுக்கிரீவன் அரசு புரிதல்

4146. ஆரியன் அருளின் போய்த் தன்
      அகல் மலை அகத்தன் ஆன
சூரியன் மகனும், மானத்
      துணைவரும், கிளையும், சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள் தாய்
      என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன,
      செவ்விதின் அரசுசெய்தான்.

     ஆரியன் அருளின் போய் -இராமன் கட்டளைப்படி கிட்கிந்தை
சென்று;தன் அகல் மலை அகத்தன் ஆக -தனக்குரிய அகன்ற மலையின்
உள்ளிடத்தைச் சேர்ந்தவனான;சூரியன் மகனும் -சூரியன் மகனாகிய
சுக்கிரீவனும்;மானத் துணைவரும் -(அரசாட்சிக்குத் துணையாயுள்ள)
பெருமை பொருந்திய அமைச்சர் முதலியோரும்;கிளையும் சுற்ற -
உறவினர்களும் தன்னைச் சூழ்ந்து நிற்க;தாரையை வணங்கி -(தன்
தமையன் மனைவியான) தாரையை வணங்கி;அன்னாள் தாய் என -அவள்
தனக்குத் தாய் என்று சொல்லும்படியாகவும்;முந்தைச் சீரியன் சொல்லே -
தனக்கு முனபிறந்தவனும் சிறப்புள்ளவனுமான வாலியின் அறிவுரைகளே;
தந்தை என்ன -
தனக்குத் தந்தை என்று சொல்லும்படியாகவும்;செவ்விதின்
அரசு செய்தான் -
செம்மையாக அரசாட்சியை நடத்தலானான்.

     தமையனைத் தந்தையைப் போல மதித்தலும், அவன் மனைவியைத்
தாயெனக் கருதுதலும் சான்றோர் நெறியாகும்.  அவ்வாறே சுக்கிரீவன்
தாரையை வணங்கித் தாய் போல மதித்து அவள் சொற்படி நடப்பவனாயினன்
என்பதும், வாலி இறந்து விட்டதால் அவன் சொல்லியதைச் செய்தலையே
தந்தை சொற்படி