பக்கம் எண் :

322கிட்கிந்தா காண்டம்

அளப்ப - தனது கட்டளை தடையின்றி எங்கும் செல்ல; கிளைஞரின் - இன்
ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளது.  கேள் - அரசியல் சுற்றமும் உறவியல்
சுற்றமும்.  இனிதினின் இருந்தான் - அங்கதன் இளவரசனாயிருந்து  அரச
காரியங்களைக் கவனித்து வரச் சுக்கிரீவன் இன்பம் அனுபவித்துக்
கொண்டிருந்தான் என்க.                                       33