பக்கம் எண் :

கார்காலப் படலம் 323

9.  கார்காலப் படலம்

     மழைக்கால நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுவதால் இப்படலம் கார்காலப்
படலம் எனப்பட்டது.  மழைக்கால வர்ணனை, சீதையின் பிரிவால் வருந்தும்
இராமன் நிலை, இராமனை இலக்குவன் ஆற்றுவிக்கும் பாங்கு ஆகியன
இப்படலத்தில் இடம் பெறுகின்றன.

     இராமலக்குவர் கிட்கிந்தை மலைக்கு அருகில் உள்ள பிரசிரவண
மலையில் தங்கியிருக்கையில் தெக்கணாயனம் தொடங்கிற்று. கார்மேகங்கள்,
வஞ்சனை அரக்கர்தம் வடிவென வானமெங்கும் இரண்டு பரவின.  இடியும்
மின்னலும் தோன்ற, வாடைக்காற்று வீசலாயிற்று. கால மாரி பொழிய, உலர்ந்த
மரங்கள் தழைத்தன.  இந்திர கோபம் எங்கும் ஊர்ந்து பரவின; காந்தள்,
கொன்றை, கூதாளம், முல்லை போன்ற மலர்கள் மலர்ந்தன.  மான்கள் துள்ளி
விளையாடின. நீர் நிலைகளில் அன்னங்கள் படித்தாடக் கரிய மேகங்களைச்
சார்ந்து நாரைகளும், கொக்குகளும் வரிசையாய்ப் பறந்தன.  நிலமகள் உடல்
சிலிர்த்தாற் போன்று பசும் புல் செழித்தன.  மயில்கள், கானம் எங்கும்
பரப்பிய கண்ணெனத் தோகை விரித்தாடின.  குயில்கள் குரல் அடங்கின.
பசுக்களின் கால்களால் இடறப்பட்டுக் காளான்கள் செறிதயிர்த்துணடங்களாய்க்
காட்சி அளித்தன.  நானில மகளிரும் தன் நிலத்திற்குரிய மலர்களைச் சூடி,
மகிழ்ந்தனர்.

     இக்கார்காலத்தில் சீதையை எண்ணி வருந்திய இராமன் மேகம், மயில்,
கொடி, மான் முதலியன கண்டு அவை தன்னை வருத்துவதாக எண்ணிக்
கலங்கினான்.  சீதையின் பற்களையும் இதழ்களையும் நினைவூட்டிய முல்லை
அரும்பையும் இந்திர கோபத்தையும் பார்த்துக் கலக்கம் அடைந்தான்.  யமன்,
வாடையாய்த் தன் உருவினை மாற்றி வந்து துன்புறுத்துவதாக மயங்கினான்.
இங்ஙனம் தன் பெருமை அழிந்து இரங்கும் இராமனை நோக்கி இலக்குவன்
''அறவழி நடக்கும் நினக்கன்றி வேறு எவர்க்கு வெற்றி கிட்டும்?'' எனப் பல
கூறித் தேற்றினான்.

     நாட்கள் பல கழிய, கதிர்காலம் வந்து எதிர்ந்தது. நீர்நிலைகளில் நீர்
நிரம்பிட அன்றிலும் மகன்றிலும் புறம் போக இயலாது தத்தம் துணையோடு
உயிர் ஒன்றி உறைந்தன.  கதிரவனைக் கண்டு பொழுதறிதல் அரிதாயிற்று.
நானில உயிர்களும் குளிர்தாங்காது ஒடுங்கின.  யானைகள் மலை போல
உறங்காதனவாய் விளங்கின.  அன்னப் பறவைகள அகிற்புகையில் குளிர்காய,
மந்திகள் குகைகளில் உறங்கக் குரங்குகள் யோகியர் போல் இருந்தன.  மகளிர்
அருவி ஆடாமையின் அவை மகளிர்தம் கூந்தல் மணம் கமழப் பெறாதன
ஆயின; ஊஞ்சல்கள் ஆடுவாரின்றிக் கிடந்தன.  இடையர்கள் ஆட்டுக்
குட்டிகளுடன் சிற்றிலை மரங்களின் அடியில் ஒதுங்கினர்.  பேய்களும் முள்
எயிறு தின்ற பசியால் வருந்தின.

     கூதிர்க் காலக் காட்சிகள் இராமனை வருத்தின.  'நான் இன்னும்
இறவாமல் உள்ளேனே? கானகம் புக்கு நான் முடித்த காரியம் கண்டு மேல்
உலகினர், கீழ் உலகினர் நகுவரே? என் துனப்த்திற்கு ஒரு முடிவு இல்லையா?'
எனப் பல