கடம் திறந்து எழுகளிறு அனைய -கன்னங்கள், கபாலங்கள் வழி (மதநீர் சொரிந்து கொண்டு) செல்கின்ற ஆண்யானைகளை ஒத்திருந்த;கார் முகில் -கரிய மேகங்கள்;இடம் திறந்து ஏகலின் -(தாம் கவிந்து கொண்டிருந்த) விண்ணிடத்தை (வெளியாகும்படி) விட்டுச் சென்றமையால்; இந்துவும் -(கார்மேகங்களால் மறைக்கப்பட்டிருந்த) சந்திரனும்;படம் திறந்து உருவலின் -(மறைக்கும்பொருட்டு இடப் பட்ட) திரைச்சீலையை உருவித் திறந்துவிட்டதால்;நடம் திறன் நவில் வுறு -நடனத்தைத் திறம்படச் செய்யும்;நங்கைமார் முகம் -நடன மங்கையரின் முகம்;பொலியும் பான்மைபோல் -விளங்கும் தன்னை போல;பொலிந்தது -விளங்கித் தோன்றிற்று. மழை பொழிந்துவிட்டுச் செல்லும் மேகத்திற்கு மதம் சொரிந்துவிட்டுச் செல்லும் களிறு உவமை. கரிய பெரிய வடிவமும், விரைந்த கதியும், முழக்கமும், மழை பொழிதலும் பற்றி 'கடம் திறந்து எழு களிறு அனைய கார்முகில்' என்றார். மேகங்களின் மறைப்பு நீங்கச் சந்திரன் விளக்கமுறத் தோன்றியமைக்கு, அரங்கில் திரைச்சீலை விலகப் புலனாகும். நடன மங்கையர் முகம் உவமையாயிற்று. படம் -திரைச்சீலை. 109 4257. | பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை பூசிய சந்தனம், புழுகு, குங்குமம், மூசின முயங்கு சேறு உலர, மொண்டு உற வீசின, நறும் பொடி விண்டு, வாடையே. |
பாசிழை மடந்தையர் -பசும் பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்த மகளிரின்;பகட்டு வெம் முலை -பெரிய விரும்பத்தக்க மார்பகங்களில்;பூசிய சந்தனம் -பூசப்பட்ட சந்தனம்;புழுகு, குங்குமம் - புழுகு, குங்குமப்பூ;மூசின முயங்கு சேறு -(ஆகிய இவை) கலந்ததனாலாகிய கலவை மிகுதி;உலர -உலருமாறு;வாடை -வாடைக்காற்று;நறும்பொடி விண்டு -நறுமணமுள்ள மகரந்தப்பொடி களைச் (மலர்களினின்று) சேகரித்து; மொண்டு உற வீசின -நிறைய முகுந்து கொண்டு வந்து மிகுதியாக வீசிற்று. மகளிர் மார்பில் பூசிய சந்தனம் போன்ற கலவைச் சேறு உலரும்படி வாடைக்காற்று மலர்களின் மகரந்தப் பொடிகளை முகந்து வீசிற்று என்பதாம். முயங்கு சேறு என்றது கலவைச் சாந்தினை. அது குழம்பாக இருத்தலின் அப்பெயர் பெற்றது. வாடை - வடக்கிலிருந்து வீசும் காற்று. 'வாடைக்காற்று' எனப்பட்டது. காற்று மாறி மாறி வெவ்வேறு இடங்களில் வீசுவதால் 'வீசி' எனப்பன்மையில் கூறினார். 110 4258. | மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றவான், அந் நெறிப் பருவமும் நணுகிற்று ஆதலால், |
|