பக்கம் எண் :

416கிட்கிந்தா காண்டம்

 ஒளித்தன ஆம் என,
     ஒடுங்க கண்ணன,
குளித்தன, மண்ணிடை -
      கூனல் நந்து எலாம்.

     கூனல் நந்து எலாம் -முதுகு வளைந்த நந்தைகளெல்லாம்;அளித்
தன முத்து இனம் -
தாம் ஈன்றனவாகிய முத்துக்கள்;தோற்ப -(மகளிரின்
பற்களுக்க ஒப்பாகாமல்) தோற்றுவிட்டமையால்;மான் அனார் -மான்
போன்ற பார்வையை உடைய மகளிர்;எதிர் வெளிப்பட்டு -எதிரில்
வெளிப்பட்டு வந்து;விழிக்கவும் வெள்கி -பார்ப்பதற்கும் நாணி;
மேன்மையால் -
(தம்) மேன்மையான பண்பினால்;ஒளித்தன ஆம் என -
ஒளிந்து கொண்டன என்று சொல்லுமாறு;ஒடுங்க கண்ணன் -ஒடுங்கிய
கண்களை உடையனவாய்;மண்ணிடைக் குளித்தன -சேற்றில் மூழ்கின.

     நத்தைகள் இயல்பாக மண்ணில் மறைந்ததற்குத் தாம் ஈன்ற முத்துக்கள்
மகளிருடைய பற்களுக்குத் தோற்றதனால், அவர்கள் முன் வெளிப்பட்டுத்
தோன்றவும் நாணி மறைந்தன எனக்கூறியது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.
மேன்மை என்பது மான உணர்வைக் குறித்தது.  நத்தைகள் தாம் ஈன்ற
முத்துக்களின் தோல்வியைத்தம் தோல்வியாகக் கருதி நாணிய மேன்மையைக்
காண்க.  முத்துப் பிறக்கும் இடங்களில் ஒன்று நத்தை. 'நத்தின் வயிற்றில்
முத்துப் பிறக்கும்' என்பது பழமொழி.                              120

4268. மழை படப் பொதுளிய
      மருதத் தாமரை
தழை படப் பேர் இலைப்
      புரையில் தங்குவ,
விழைபடு பெடையொடும்,
      மெள்ள, நள்ளிகள்,
புழை அடைத்து ஒடுங்கின,
      வச்சை மாக்கள்போல்.

     மழை படப் பொதுளிய -மழை பெய்ததால் செழித்த;மருதத் தாமரை
-
மருத நிலத்திற்குரிய தாமரை;தழை பட -செழித்து வளர;பேர் இலைப்
புரையில் தங்குவ -
(அவற்றின்) பெரிய இலையின் கீழ்த் தங்குவனவான;
நள்ளிகள் -
ஆண் நண்டுகள்;விழைபடு பெடையொ டும் -விருப்பம் மிக்க
தம் பெண் நண்டுகளுடனே;வச்சை மாக்கள் போல் -உலோபிகள் போல;
மெள்ள -
மெதுவாக;புழை அடைத்து -தம் வளையின் வாயிலைச்
சேற்றால் அடைத்துக் கொண்டு;ஒடுங்கின -அதன் உள்ளே ஒடுங்கிக்
கிடந்தன.

     இரவலர், நண்பர், விருந்தினர், சுற்றத்தினர் என எவரேனும் தம்
இல்லத்திற்கு வந்துவிடுவரோ என்று அஞ்சி உலோபிகள் தம் வீட்டுக்கதவை
அடைத்துக்