கொண்டு தம் மனைவி மக்களுடன் உள்ளிருப்பர் அதுபோல ஆண்நண்டுகள், தன் பெடைகளோடு தாம் வாழும் வளைகளின் வாயிலைச் சேற்றால் அடைத்துக் கொண்டு உள்ளிருந்தன. நண்டுகளுக்கு உலோபிகள் உவமை ஆயினர். உவமை அணி. முன்னர்ப் 'பெடை' எனக்கூறியதால் 'நள்ளி' என்னும் நண்டின் பொதுப் பெயர் ஆண்நண்டைக் குறித்து நின்றது. மருதநிலத்திற்கே சிறப்புடையதாதலின் 'மருதத் தாமரை' என்றார். விலங்கு போன்ற மனிதர் என்ற இழிவு தோன்ற 'வச்சை மாக்கள் போல' என்றார். 121 |