இரையாக்க முடியுமென்பதைச் சொல்லுமாறு இலக்குவனிடம் இராமன் உரைத்தான் என்பது. கண்டகர் - தீயோர். தீயோரை ஒறுத்து நல்லறம் நாட்டுதல் ஆகிய அவதாரப்பாங்கு இங்கே புலப்படுவது காண்க. 4 4273. | 'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால், அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன் நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய். |
நஞ்சம் அன்னவரை -நஞ்சு போன்ற கொடியவர்களை;நலிந்தால் அது வஞ்சமன்று -தண்டித்தால் அது கொடுமையாகாது;மனு வழக்கு ஆதலால் -(அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்; (இதை); அஞ்சில் ஐம்பதில் -ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்;ஒன்று அறியாதவன் -தக்கது தகாதது என்பதனை அறி யாதவனான அச் சுக்கிரீவனது;நெஞ்சில் நின்று நிலாவ -மனத்தில் நன்றாகப் பதிந்து விளங்கும்படி;நிறுத்துவாய் -(சொல்லி) நிலை நிறுத்துவாய். கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்; ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற்பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச் செயலாம் என்பது. அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் - அஞ்சிலும் (வயது) ஒன்று அறியாதவன்; ஐம்பதிலும் ஒன்று அறியாதவன்; அதாவது இளமையிலும் முதுமையிலும் செய்வது அறியாதவன். 'ஆறிலறியார் நூறிலும் அறியார்'; 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டில்' என்னும் பழமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன. உலக வழக்கு நவிற்சி அணி. அஞ்சு -போலி. 5 4274. | ' ''ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும், நீரும் ஆளுதிரேஎனின், நேர்ந்த நாள் வாரும்; வாரலிர் ஆம் எனின், வானரப் பேரும் மாளும்'' எனும் பொருள் பேசுவாய். |
ஊரும் ஆளும் -(உங்கள்) நகரமான கிட்கிந்தையையும், குடி மக் களையும்;அரசும் உம் சுற்றமும் -அரசாட்சியையும் உங்களது உறவினர்களையும்;நீரும் ஆளுதிரே எனின் -நீங்களே அள விரும்பினால்; நேர்ந்த நாள் -(சீதையைத்) தேடுவதற்காக வர ஒப்புக்கொண்ட இக் கார்த்திகை மாதத்தில்;வாரும் -(உடனே புறப்பட்டு) வர வேண்டும்;வாரலிர் எனின் -(அவ்வாறு) வராமல் போவீரானால்;வானரம் பேரும் மாளும் - வானரம் என்னும் பெயரும் (இவ்வுலகில்) இல்லாது ஒழியும்;எனும் பொருள் பேசுவாய் - என்னும் உண்மையை (சுக்கிரீவன்) முதலானவரிடம் நீ உணர்த்துவாய். நீரும் - உம் இசை நிறை: அசை நிலையுமாம். 6 4275. | ' ''இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கு வலி துன்னினாரை'' எனத் துணிந்தார்எனின், |
|