பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 423

 தூணிபூட்டி, தொடு
      சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் -
      சிந்தையின் நீங்கலான்.

     ஆணைசூடி -(இராமனின்) கட்டளையைத் தலைமேற்கொண்டு;
அடிதொழுது -
அவனது திருவடிகளை வணங்கி;ஆண்டு இறை பாணியாது
-
அந்த இடத்தில் சிறு நொடியும் தாமதிக்காமல்;படர் வெரிந் -விரிந்த
(தனது) முதுகில்;பாழ்படாத் தூணி பூட்டி -(அம்புகள்) குறையாத அம்புப்
புட்டிலைக் கட்டிக்கொண்டு;தொடுசிலை தொட்டு -தொடுப்பதில் வல்ல
வில்லைக் கையில் பிடித்து;சிந்தையின் நீங்கலான் -மனத்தில் இராமனை
நினைந்து கொண்டே;அருஞ் சேணின் நீங்கினன் -செல்வதற்கு அரிய
நீண்ட வழியில் சென்றான்.

     இராமன்பால் இலக்குவன் கொண்ட பக்திச் சிறப்பு இப் பாடலாற்
புலனாகிறது.  சிந்தையின் நீங்கலான் - இராமனது மனத்திலிருந்து நீங்காத
அன்புத்தம்பி என்றும் கூறலாம். சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான்:
முரண்.                                                     9

4278.மாறு நின்ற மரனும், மலைகளும்,
நீறு சென்று நெடு நெறி நீங்கிட,
வேறு சென்றனன்; மெய்ம்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றவன் - ஆணையின் ஏகுவான்.

     மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் -சத்தியத்தால் சிறக்கும்
வழியில் இயங்குபவனாகிய இராமபிரானின்;ஆணையின் ஏகு வான் -
கட்டளைப்படி செல்பவனாகிய இலக்குவன்;மாறுநின்ற மரனும் -குறுக்கே
நின்ற மரங்களும்;மலைகளும் -மலைகளும்;நீறு சென்று -(தான் செல்லும்
வேகத்தால்) தூளாகி;நெடுநெறி நீங்கிட -நெடிய வழியில் (நீண்ட தூரத்தில்)
சென்று பரவும்படியாக;வேறு சென்றனன் -புதுவழி அமைத்துக்கொண்டு
சென்றான்.

     பழக்கப்பட்ட வழியன்றாதலின் 'வேறு சென்றனன்' என்றார்.  காற்றில்
பறந்து பரவும் துகள் நெடுந்தொலைவு போகுமாதலின் 'நெடுநெறி' என்றார்.  10

4279.விண்  உறத் தொடர்
     மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு
      அழுந்தின, மாதிரம்;
கண் உறத் தெரிவுற்றது,
      கட்செவி -
ஒண் நிறக் கழல்
      சேவடி ஊன்றலால்.