ஒண்நிறக் கழல் சேவடி -ஒளிமிக்க நிறமுள்ள வீரக்கழலை யணிந்த (இலக்குவனின்) பாதங்கள்;ஊன்றலால் -அழுந்துவதால்;விண்உறத்தொடர் -வானுலகத்தைத் தொடுமாறு வளர்ந்துள்ள;மேரு வின் சீர்வரை - மேருமலையின்(உயரத்தின்) எல்லையளவாக;மாதிரம் மண்உற -மலைகள் நிலத்திலே பொருந்த;புக்கு அழுந்தின -உள்ளே சென்று அழுந்தின; (அப்பொழுது)கட்செவி கண்உற -(பூமியைத் தாங்கும்) ஆதிசேடனாகிய பாம்பு கண்களுக்கு;தெரிவுற்றது -புலனாயிற்று. கட்செவி - பாம்பு; இங்கே ஆதிசேடனைக் குறித்தது. உயர்வு நவிற்சியணி. 11 4280. | வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால், உம்பர் தோறும் மராமரத்து ஊடு செல் அம்பு போன்றனன், அன்று - அடல் வாலிதன் தம்பிமேல் செலும் மானவன் தம்பியே. |
அன்று -அப்பொழுது;அடல் வாலியின் -வலிமையுள்ள வாலியின்; தம்பிமேல் செலும் -தம்பியான சுக்கிரீவனிடம் செல்லுகின்ற;மானவன் தம்பி -மனுகுலத் தோன்றலாகிய இராமன் தம்பியான இலக்குவன்;வெம்பு கானிடை -வெப்பம் மிகுந்த காட்டிலே;போகின்ற வேகத்தால் -செல்லும் வேகத்தினால்;உம்பர் தோயும் -வானத்தை அளாவி நின்ற;மராமரத்து ஊடு செல் -ஏழு மராமரங்களின் இடையே துளைத்துச் சென்ற;அம்பு போன்றனன் -(இராம) பாணத்தை ஒத்திருந்தான். இராம பாணம் ஏழு மராமரங்களைத் துளைத்துச் சென்றதுபோல, இலக்குவன் தான் செல்லும் காட்டு வழியிலுள்ள மரங்களை அழித்துச் சென்றான் என்றபடி. உவமையணி, உம்பர் தோயும் மராமரம் - உயர்வு நவிற்சி. 12 4281. | மாடு வென்றி ஓர் மாதிர யானையின் சேடு சென்று கெடில், ஒரு திக்கின் மா நாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து ஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான். |
ஒரு திக்கின் மா -ஒரு திசை யானை;மாடு வென்றி -பக்கத்தி லுள்ள வெற்றி பொருந்திய;ஓர் மாதிர யானையின் -மற்றொரு திசை யானையினுடைய;சேடு சென்று -இளங்கன்று விலகிச் சென்று;கெடில் - வழி தவறிச் சென்று விட்டால்;நாடுகின்றதும் - (அதைத்) |