பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 425

தேடுவதாய்;நண்ணிய கால்பிடித்து -(அக்கன்று) சென்ற அடிச்சுவடு களைப்
பின்பற்றி;ஓடுகின்றதும் -விரைந்து செல்வதை;ஒத்து உளன் ஆயினான் -
(இலக்குவன்) ஒத்தவன் ஆனான்.

     பக்கத்தில் நின்ற ஒரு திசை யானையின் கன்று விலகிச் சென்று
காணாமற் போய் விட்ட போது அதனோடு நட்புக்கொண்ட வேறொரு திசை
யானை அதனைத் தேடுவதற்காக அடிச்சுவடுகளைப் பின்பற்றி விரைந்து
செல்லும்.  அவ்வாறு செல்லும் திசையானை போன்றவன் இலக்குவன் என்பது.
                                                           13

4282.உருக் கொள் ஒண்
      கிரி ஒன்றின்நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன், பொன்
     ஒளிர் மேனியான் -
அருக்கன் மா உதயத்தின்நின்ற
      அத்தம் ஆம்
பருப்பதத்தினை எய்திய
      பண்புபோல்.

     அருக்கன் மா உதயத்தினின்று -சூரியன் பெருமை பொருந்திய
உதயமலையிலிருந்து;அத்தம் ஆம் பருப்பதத்தினை-அத்தமன மலையை
அடைந்தது போல;பொன் ஒளிர் மேனியான் -பொன்னி றத்தோடு
விளங்கும் மேனியையுடைய இலக்குவன்;உருக்கொள் -பெரிய வடிவு
கொண்ட;ஒள்கிரி ஒன்றினின்று -ஒளிமிக்க ஒரு மலையிலிருந்து
(மாலியவான் மலை);ஒன்றினை -மற்றொரு மலையை (கிட்கிந்தையை);
பொருக்க எய்தினன் -
விரைவிலே சென்று சேர்ந்தான்.

     இடையே தங்குதலும், தடங்கலும் இன்றி விரைந்து சென்று சேரும்
இயல்பு சூரியனுக்கும், இலக்குவனுக்கும் பொருந்தும்.

     சூரியன் உவமை, நிறத்திற்கும் மேனி ஒளிக்கும் ஆம். பொருக்க:
விரைவுக் குறிப்பு. உதயகிரி - கிழக்கின் கண் உள்ள மலை; அத்தமனகிரி -
மேற்கின் கண் உள்ள மலை; பருப்பதம் :மலை                     14

4283. தன் துணைத் தமையன்
      தனி வாளியின்
சென்று, சேண் உயர்
      கிட்கிந்தை சேர்ந்தவன்,
குன்றின்நின்று ஒரு
      குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச்
      சீயமும் போன்றனன்.

     தன் துணைத் தமையன் -தனக்கு உற்ற துணைவனும் தமையனுமான
இராமனது;தனி வாளியின் சென்று -ஒப்பற்ற அம்பு போல