மின்னின மணியினின் -ஒளிவிடுகின்ற மணிகளினாலும்;பளிங்கின் வெள்ளியின் -படிகக் கற்களாலும் வெள்ளியினாலும்;பின்னின சிவிகை - செய்யப்பட்டவனாகிய பல்லக்குகள்;விசும்பினும் பெரிய -ஆகாயத்தைவிட மிக விரிந்தனவாய்;பெட்புறத் துன்னின -யாவரும் விரும்பும்படி நெருங்கிவந்தன;வெண் கவிகை -வெண்கொற்றக் குடைகள்;சுற்றின - சுழன்று வந்துன. குடைகள், அகன்ற ஆகாயம் முழுவதையும் மறைத்தலால் 'விசும்பினும் பெரிய' என்றார். விரிவு அல்லது அகற்சிக்கே விசும்பு உவமையாக்கப் பெறும். 122 4391. | வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி பாரினில் சேறலின், பரிதி மைந்தனும், தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித் தேரினில் சென்றனன், சிவிகை பின் செல. |
வீரனுக்கு இளையவன் -இராமனுக்குத் தம்பியான இலக்குவனது; விளங்கு சேவடி -ஒளிவிடுகின்ற சிவந்த திருவடிகள்;பாரினில் சேறலின் - நிலத்தில் நடந்து செல்லுவதனால்;பரிதி மைந்தனும் -சூரிய குமாரனான சுக்கிரீவனும்;தாரினில் பொலன் கழல் தழங்க -கிண்கிணி மாலைகள் போலக் காலில் கட்டிய வீரக் கழல்கள் ஒலிக்க;(தானும் காலால் நடந்து); சிவிகை பின் செல-பல்லக்கு தனக்குப் பின்னே வர;தாரணித் தேரினில்- பூமியாகிய தேரின் மேல்;சென்றனன் -சென்றான் (தரையில் நடந்தான்). இலக்குவன் பாதம் வருந்தப் பூமியில் நடந்து செல்லுதலால், சுக்கிரீவனும் சிவிகையேறிச் செல்லாமல் தரையில் நடந்து சென்றான் என்பது. தார் - கிண்கிணிமாலை. இலக்குவனும், சுக்கிரீவனும் ஒரு பொற் சிவிகையிலேறிச் சென்றதாக வான்மீகி கூறுவார். 123 4392. | எய்தினன், மானவன் இருந்த மால் வரை, நொய்தினின் - சேனை பின்பு ஒழிய, நோன் கழல் ஐய வில் குமரனும், தானும், அங்கதன் கை துறந்து அயல் செல, காதல் முன் செல. |
நோன் கழல் -வலிய வீரக் கழலையும்;ஐய வில் குமரனும் - அழகிய வில்லையும் உடைய இலக்குவனும்;தானும் -சுக்கிரீவனும்;சேனை பின்பு ஒழிய -(உடன் வந்த) வானர சேனைகள் பின்னே தங்கவும்; அங்கதன் கைதுறந்து -அங்கதன் பக்கத்தை விட்டு;அயல் |