பக்கம் எண் :

492கிட்கிந்தா காண்டம்

4396. அயல் இனிது இருத்தி,
      'நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே?
      இனிதின் வைகுமே,
புயல் பொரு தடக் கை
      நீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே, குடை?'
      என வினாயினான்.

     அயல் இனிது இருத்தி -(இராமன் சுக்கிரீவனை) அருகில் இனி
மையாக இருக்கச் செய்து;நின் அரசும் ஆணையும் -(அவனை நோக்கி)
உனது ஆட்சியும் ஆணையும்;இயல்பினில் இயைந்தவே -ஒருவகை
இடருமின்றி நூல்கள் கூறிய முறையால் இயல்பாகவே அமைந்துள்ள னவா?
புயல் பொரு தடக்கை -
மேகம் போன்ற (கைம்மாறு கருதாமல்
கொடுக்கவல்ல) நீண்ட கைகளையுடைய;நீ புரக்கும் பல் உயிர் -உன்னால்
காக்கப்படுகின்ற பல உயிர்களும்;இனிதின் வைகுமே -இன்பமாக வாழ்ந்து
வருகின்றனவா?குடை வெயில் இலதே -உனது வெற்றிக் குடை வெம்மைத்
தராமல் இருக்கிறதா?என வினாயினான் -என்று கேட்டான்.

     இராமனது முதல் வினா சுக்கிரீவனது நன்மையையும், பிற வினாக்கள்
குடிகளின் நன்மையையும் கருதி நிகழ்ந்தவை. அரசாட்சி, அரசபாரம்
எனப்படுவதாலும், அதைச் செய்யும்போது எங்கும் தன் ஆணை
செல்லவேண்டிருயிப்பதாலும் அவை எவ்வித இடையூறுமின்றித் தடைப்படாமல்
நடக்கின்றனவா என்பான் 'நின்னரசும் ஆணையும் இயல்பினின் இயைந்தவே'
என்றும், அவை எங்கும் தடையின்றிச் சென்றாலும் குடிகளுக்கு இனிமை
தருவது இன்றியமையாததாதலால் 'நீ புரக்கும் பல்லுயிர் இனிதின் வைகுமே'
என்றும் வினவினான்.                                           128

சுக்கிரீவன் தன் பிழைக்கு வருந்தல்

4397.பொருளுடை அவ் உரை
      கேட்டபோழ்து, வான்
உருளுடைத் தேரினோன்
      புதல்வன், 'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி
      அன்ன நின்
அருளுடையேற்கு அவை
      அரியவோ?' என்றான்.

     பொருளுடை -சிறப்பான பொருள் பொருந்திய;அவ் உரை கேட்ட
போழ்து -
(இராமனது) அந்தச் சொற்களைக் கேட்ட அளவில்;வான உருள்
உடை -
ஆகாயத்தில் செல்லுகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய;