தேரினோன் புதல்வன் -தேரைக் கொண்டவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; (இராமனைப் பார்த்து);ஊழியாய் -ஊழிக் காலத்தும் அழியாது நிலைத்துள்ளவனே!இருள் உடை - இருளையு டைய;உலகினுக்கு இரவி அன்ன -உலகத்திற்குக் கதிரவன் போன்ற;நின் அருளுடையேற்கு - உனது அருளைப் பெற்ற எனக்கு;அவை அரியவோ -அச் செயல்கள் அருமையானவையோ?என்றான் -என்று கூறினான். சுக்கிரீவன் தன் மனைவியைப் பிரிந்து வாலியினால் துரத்தப்பட்டு உருசிய முக மலையில் செய்வது இன்னதென்று தெரியாமல் திகைத்து நின்ற காலத்தில், தன் துயரம் யாவும் ஒருங்கே நீங்குமாறு வந்த இராமனுக்கு, புற இருள் கவிந்து செய்தொழில் அறியாது மயங்கிக் கிடக்கும் இவ்வுலக உயிர்களுக்கு அந்த இருளை நீக்குமாறு தோன்றும் கதிரவனை உவமையாக்கினார். உனது கருணையொன்று தானே எனக்கு எல்லாவற்றையும் இனிது நடத்துகின்றது என்பான் 'நின் அருளுடையேற்கு அவை அரியவோ' என்றான். இத் தொடர்களால், சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தியும், நயம்பட உரைக்கும் ஆற்றலும் தெளிவாம். உருள் - ஒற்றைச் சக்கரம். அரியவோ - ஓகாரம் எதிர்மறை. 129 4398. | பின்னரும் விளம்புவான், 'பெருமையோய்! நின்று இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்; மன்னவ! நின் பணி மறுத்து வைகி, என் புல் நிலைக் குரங்கு இயல் புதுக்கினேன்' என்றான். |
பின்னரும் -(சுக்கிரீவன் இராமனை நோக்கி) மறுபடியும்;விளம்புவான் -கூறுவான்;'பெருமையோய் -பெருமைக் குணமுடைய வனே!மன்னவ - அரசனே!நினது இன் அருள் -உனது இனிய அருளால்;உதவிய செல்வம் எய்தினேன் -கிடைத்தற் கரிய செல்வத்தை அடைந்தேன்;நின் பணி மறுத்து வைகி -(அவ்வாறு பெற்றிருந்தும்) உனது கட்டளையை மீறி நடந்து; என் புல் நிலை -எனது அற்பமான;குரங்கு இயல் புதுக்கினேன் - குரங்குப் புத்தியைப் புதிதாக வெளிப் படுத்தி விட்டேன்;என்றான் -என்று கூறினான். உதவி செய்தவர் திறத்தில் செய்ந் நன்றி மறந்து பிழை செய்த தனது இழிகுணத்தைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது. 130 4399. | 'பெருந் திசை அனைத்தையும் பிசைந்து தேடினேன் தரும் தகை அமைந்தும், அத் தன்மை செய்திலேன்; |
|