| திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ, வருந்தினை இருக்க, யான் வாழ்வின் வைகினேன். |
(பின்னும் இராமனை நோக்கிச் சுக்கிரீவன்);பெருந்திசை அனைத் தையும் -பெரிய திக்குகள் எல்லாவற்றையும்;பிசைந்து தேடினேன் - துருவித் தேடிப் பார்த்து;தரும் தகை -சீதையைக் கொண்டுதரக் கூடிய திறமை;அமைந்தும் -(என்னிடம்) இருந்தும்;அத் தன்மை செய்திலேன் - அவ்வாறு செய்யாதவனாய்;திருந்து இழை திறத்தினால் -வேலைப்பாடு மிக்க அணிகளை அணிந்தவளான சீதையின் பொருட்டு;தெளிந்த சிந்தை நீ-இயல்பாகவே கலக்கம் இல்லாமல் தெளிந்த மனமுடைய நீ;வருந்தினை இருக்க -வருந்தி இருக்கவும்;யான் -(அதைச் சிறிதும் எண்ணாமல்) நான்; வாழ்வில் வைகினேன் -இன்ப வாழ்க்கையில் காலங்கழித்தேன். கலங்காத இராமனது மனம் கலங்கியிருக்க அதைத் தெளிவிக்கும் வல்லமை தனக்கு இருந்தும் அதற்கேற்ற வழிமுறையும் தேடாது இன்ப வாழ்வில் பொழுது போக்கியிருந்த தன் பேதைமையைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது. திருந்திழை - சீதை: அன்மொழித் தொகை. 131 4400. | 'இனையன யானுடை இயல்பும், எண்ணமும், நினைவும், என்றால், இனி, நின்று யான் செயும் வினையும், நல் ஆண்மையும், விளம்ப வேண்டுமோ? - வனை கழல், வரி சிலை, வள்ளியோய்!' என்றான். |
வனைகழல் -கட்டிய வீரக் கழலையும்;வரிசிலை வள்ளியோய் - கட்டமைந்த வில்லையுமுடைய வள்ளலே!யான் உடை -என்னுடைய; இயல்பும் எண்ணமும் -தன்மையும் மனக்கருத்தும்;நினைவும் - எண்ணங்களும்;இனையன என்றால் -இத் தன்மையனவாக இருந்தால்;இனி யான் -இனிமேல் நான்;நின்று செயும் -துணையாக இருந்து செய்யப் போகின்ற;வினையும் நல்லாண்மையும் -செயலையும் சிறந்த வீரத்தையும்; விளம்ப வேண்டுமோ -சொல்லத் தகுமோ;என்றான் -(இராமனை நோக்கிச் சுக்கிரீவன் மனம் வருந்திக்) கூறினான். நீ மனத்தில் பெருந் துயரத்தோடு இருக்கவும் நானோ சீதையைத் தேடித்தர வேண்டிய முயற்சி செய்யாமல் இன்ப நுகர்ச்சியில் இதுவரையில் மனம் தோய்ந்திருந்தமையால், இனி அச் செயலை விரைந்து முடிப்பேனென்று எனது செயலாண்மையைக் |