பக்கம் எண் :

496கிட்கிந்தா காண்டம்

 சூரியன் கான்முளை, 'தோன்றுமால், அவன்
நா அரும் பரவையின் நெடிய சேனையான்.'

     ஆரியன் -இராமன்;பின்னரும் அமைந்து -மறுபடியும் சொல்லத்
தொடங்கி (சுக்கிரீவனை நோக்கி);நன்கு உணர் மாருதி -(முக் காலத்தையும்)
நன்றாக அறியவல்ல காற்றுக் கடவுளின் மகனான அனுமன்;எவ்வழி
மருவினான் என -
எங்கே இருக்கிறான் என்று கேட்க;(அதற்கு);சூரியன்
கான்முளை -
சூரியன் மகனான சுக்கிரீவன்;அவன் -அந்த அனுமன்;நீர்
அரும் பரவையின் -
நீர் நிரம்பிய அரிய கடல் போன்ற;நெடிய
சேனையான் -
பெருஞ் சேனையையுடையவனாய்;தோன்றும் -வந்து
சேருவான்.

     இராமன் அனுமனைக் குறித்தத் தனியே வினவியதால் அவனிடம்
இராமன் வைத்துள்ள பேரருள் தோன்றும்.  பரவை பரந்திருத்தலின் கடலுக்குக்
காரணக் குறியாயிற்று.                                           134

4403.'கோடி ஒர் ஆயிரம் குறித்த கோது இல் தூது
ஓடின நெடு்ம் படை கொணர்தல் உற்றதால்;
நாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்.

     கோடி ஓர் ஆயிரம் -ஓராயிரங் கோடியாக; குறித்த கோது இல்
தூது-
கணக்கிடப்பட்ட குற்றமற்ற தூதர்கள்;நெடும் படை -பெரிய
வானரசேனைகளை;கொணர்தல் உற்றது ஓடின -திரட்டிக் கொண்டு வரும்
பொருட்டு(ச் செய்தி செல்ல) விரைந்து சென்றுள்ளார்கள்;(இது வரை வானரப்
படைகள் வராததால் அவற்றைத் திரட்டி வருவதற்கு அனுமன்
காத்திருக்கிறான்);தரக் குறித்தது நாளும் உற்றது -(அவ்வாறு) கொண்டு
வருவதற்குக் குறித்த நாளும் வந்து விட்டது;ஆல் -ஆதலால்;இன்று
நாளை -
இன்று அல்லது நாளை;அவ் ஆடல் அம் தானையோடு -
வலிமையுள்ள அந்த வானர சேனையுடன்;அவனும் எய்தும் -அந்த
அனுமனும் இங்கே வந்துவிடுவான் (என்றான்).

     ஆல் - இரண்டனுள் முன்னது 'ஆதலால்' என்பதன் விகாரம்; பின்னது
ஈற்றசை.  அடல் - வலி:இங்கே ஆடல் என நீண்டது.                135

4404.'ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய
பின், செயத்தக்கது பேசற்பாற்று' என்றான்.

     ஒன்பதின் ஆயிரம் கோடி -(இப்பொழுது என்னுடனே)
ஒன்பதினாயிரங் கோடிக் கணக்கான;நின்பெருஞ் சேனை -உனது பெரிய
வானர சேனை;உற்றது -வந்துள்ளது;அந் நெடிய சேனைக்கும் -(இனி
வரவேண்டிய) அந்தப் பெரிய சேனைக்கு;நன்கு உறும்