பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 497

அவதி நாள் நாளை -ஒன்று திரண்டு வந்து சேர்வதற்குரிர நாளும்
நாளைக்கே;நண்ணிய பின் -அந்தச் சேனையும் வந்த பிறகு;செயத்
தக்கது-
செய்யவேண்டியதைப் பற்றி;பேசற் பாற்று -பேசுவது தகுதி யுடையது;என்றான் -என்று கூறிமுடித்தான்.

     வானர சேனையுடன் அனுமன் வந்த பிறகே செய்யத்தக்கதைப் பற்றிப்
பேசவேண்டு மென்று சுக்கிரீவன் கருதினான் என்பது.  தான் இராமனுக்கு
அடியவன் என்ற எண்ணத்தால் சுக்கிரீவன் தன் சேனையை 'நின் பெருஞ்
சேனை' என்றான்.

     நெடியசேனை - துணைப்படை.                             136

4405.விரும்பிய இராமனும், 'வீர!
      நிற்கு அது ஓர்
அரும் பொருள் ஆகுமோ?
      அமைதி நன்று' எனா,
'பெரும் பகல் இறந்தது;
      பெயர்தி; நின் படை
பொருந்துழி வா' என,
      தொழுது போயினான்.

     விரும்பிய இராமனும் -(சுக்கிரீவனிடம்) அன்புடைய இராமனும்;
(அவனை நோக்கி);வீர -வீரனே!நிற்கு அது -உனக்கு (ச் சேனை திரட்டி
முடித்தலாகிய) அச் செயலானது;ஓர் அரும்பொருள் ஆகுமோ -அரிய
காரியமாகுமோ? அமைதி நன்று -(உனது) அடக்கமான குணம் சிறந்ததாக
உள்ளது;எனா -என்று சொல்லி;பெரும்பகல் இறந்தது -(இப்பொழுது)
நீண்ட பகலோ கழிந்துவிட் டது;பெயர்தி -(ஆகவே இன்று புறப்பட்டுச்
சென்று;நின் படை -உனது சேனை;பொருந்துழி வா -திரண்டு வந்த
போது (அவற்றோடு) வருவாய்;என - என்று இராமன் விடை கொடுக்க;
தொழுது போயினான் -
இராமனை வணங்கி (ச் சுக்கிரீவன்) சென்றான்.

     சுக்கிரீவன் தன் சேனை தங்கியுள்ள பாசறைக்குச் சென்றான் என்பது.
பெயர்தி: முற்றெச்சம்.                                          137

அங்கதனையும் சுக்கிரீவனுடன் அனுப்பி இராமன்,
தம்பியுடன் வைகுதல்

4406.அங்கதற்கு இனியன அருளி, 'ஐய! போய்த்
தங்குதி உந்தையோடு என்று, தாமரைச்
செங் கணான், தம்பியும், தானும் சிந்தையின்
மங்கையும், அவ் வழி, அன்று வைகினான்.

     தாமரைச் செங்கணான் - செந்தாமரை மலர்போன்ற சிவந்த
கண்களையுடைய இராமன்;அங்கதற்கு இனியன அருளி -அங்கதனுக்கு