பக்கம் எண் :

498கிட்கிந்தா காண்டம்

இனிமையான சொற்களைக் கூறி;ஐய -ஐய;போய் உந்தையோடு
தங்குதி -
போய் உன் தந்தையாகிய சுக்கிரீவனோடு இருப்பாய்;என்று -
என்று விடை தந்து அனுப்பி;தம்பியும் -இலக்குவனும்;சிந்தையின்
மங்கையும் -
(எப்பொழுதும்) தன் மனத்தே குடியிருக்கும் சீதையும்;தானும் -
தானுமாக;அன்று அவ்வழி -அந்த இரவில் அவ் இடத்திலே;வைகினான் -
தங்கியிருந்தான்.

     இராமன் இடைவிடாது சீதையை நினைத்துக் கொண்டேயிருத்தலால்
'சிந்தையின் மங்கை' என்றார்.

     'தம்பியும் சிந்தையின் மங்கையும் தானும் வைகினான்' - தலைமை பற்றி
வந்த பால் வழுவமைதி.                                        138