கலித்துறை 4408. | ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த வானராதிபர் ஆயிரர் உடன் வர, வகுத்த கூனல் மாக் குரங்கு ஐ - இரண்டு ஆயிர கோடித் தானையோடும், - அச் சதவலி என்பவன் - சார்ந்தான். |
அச்சதவலி என்பவன் -அந்தச் சதவலி என்னும் வானர வீரன்; ஆயிரம் ஆயிரத்து ஆனை -பத்து இலட்சம் யானைகளின்;எறுழ்வலி அமைந்த -மிக்க வன்மையோடு பொருந்திய;வானர அதிபர் ஆயிரர் - வானர சேனைத் தலைவர் ஆயிரம் பேர்;உடன்வர -தன்னைப் பின்தொடர்ந்து வர;வகுத்த - அணிவகுக்கப்பட்ட;கூனல் மா -முதுகு கூனியுள்ள பெரிய;ஐ இரண்டு ஆயிர கோடி -பதினாயிரம் கோடி; குரங்குத் தானையோடு -வானர சேனையோடு;சார்ந்தான் -சுக்கிரீவனிடம் வந்தான். எறுழ் வலி: ஒரு பொருட் பன்மொழி. சதவலி: முகத்தில் நூறு மடிப்பு களையுடையவன். வான்மீகத்தில் இப்பெயர் 'சதபலி' என்று காணப்படுகிறது. 2 4409. | ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை, ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத் தோன்றினான், வந்து - சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல். |
சுசேடணன் எனும் பெயர் தோன்றல் -சுசேடணன் என்னும் பெயரையுடைய வானர வீரன்;மேருவை ஊன்றி எடுக்குறும் -மேரு மலையையும் பேர்த்து எடுக்கவல்ல;மிடுக்கினுக்கு உரிய -வலிமையு டையதும்;தேன் தெரிந்து உண்டு -மதுவை ஆராய்ந்து பருகி;தெளிவுறு - மயக்கமின்றித் தெளிவு பெற்றனவுமான;ஆன்ற வானர சேனை பத்து நூறு ஆயிர கோடியோடு -சிறந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு; அமைய வந்து தோன்றினான் -பொருந்த வந்து சேர்ந்தான். மேருவையும் பேர்த்து எடுக்கக் கூடிய வல்லமையமைந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு சுசேடணன் வந்து சேர்ந்தான் என்பது. சுசேடணன்: |