இவன் வாலியின் மனைவியான தாரைக்குத் தந்தை: வருணதேவன் மைந்தன் என்றும் கூறுவர். தோன்றல்: நல்ல தோற்றமுடையவன் என்று காரணக்குறியாம். 3 4410. | ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச் சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை ஆறு - எண் ஆயிர கோடியது உடன் வர, - அமிழ்தம் மாறு இலா மொழி உருமையைப், பயந்தவன் - வந்தான். |
அமிழ்தம் மாறு இலாமொழி -தேவ அமிழ்தமும் இணையாகாத (இனிய) சொற்களையுடைய;உருமையைப் பயந்தவன் -சுக்கிரீவன் மனைவியான உருமையைப் பெற்ற தந்தை;ஈறு இல் வேலையை -முடிவு காணப்படாத கடலையும்;இமைப்புறம் அளவினில் -கண் இமைக்கும் நேரத்தில்;கலக்கிச் சேறு காண்குறும் -கலக்கிச் சேறாக்க வல்ல;திறல் கெழு -வலிமை நிறைந்த;வானர சேனை ஆறு எண் ஆயிர கோடியது - நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனை;உடன் வர -தன்னைத் தொடர்ந்து வர;வந்தான் -வந்து சேர்ந்தான். உருமையின் தந்தை தாரன் என்பவன்; இவன் தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மைந்தன். இத் தாரன் கடலையும் கலக்கிச் சேறாக்க வல்ல நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனையோடு வந்தான் என்பது. கோடியது: (கோடி + அது) - அது பகுதிப் பொருள் விகுதி. 4 4411. | ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த, மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப, - இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பனைத் தந்த கேசரி - கடல் என நடந்தான். |
இம்பர் ஞாலத்தும் -இந்த உலகத்திலும்;வானத்தும் -விண்ணுலகத் திலும்;எழுதிய சீர்த்தி -பொறித்த பெரும்புகழையுடைய;நம்பனைத் தந்த -சிறந்தவனான அனுமனைப் பெற்ற;கேசரி -கேசரி என்னும் வானர வீரன்;ஐம்பது ஆய நூறாயிரம் கோடி எண் அமைந்த -ஐம்பது இலட்சங் கோடி என்று கணக்கிடப் பெற்ற;மால் வரை புரை -கைலை மைையைப் போன்ற;மொய்ம்பு நெடு வானரம் - |