தோள்களையுடைய பெரிய வானர சேனை;மொய்ப்ப -தன்னை நெருங்கி வர;கடல் என நடந்தான் -கடல் போன்ற தோற்றத்தோடு வந்தான். சேனையோடு வந்த கேசரிக்கு அலையோடு கூடிய கடல் உவமையாயிற்று. அனுமன், தன் செயலால் மிகப் புகழ் பெற்றானாதலால் அவனை 'இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பன்' என்றார். சீர்த்தி நம்பன்; புகழ் உருவாகிய அனுமன். நம்பன்: எல்லாரும் விரும்பும் குணமுடையவன். நம்பன் : சிவன் என்னும் பொருளும் உண்டு; சிவபெருமான் அம்சமாகப் பிறந்தவன் எனவும் கொள்ளலாம். 5 4412. | மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின, வயிரத் திண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த எண்கின் ஈட்டம் கொண்டு, - எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான். |
எறுழ் வலித் தூமிரன் -மிக்க வலிமையுடைய தூமிரன் என்பவன்; மண்கொள் வாள் எயிறு -பூமியைக் குத்தியெடுத்த ஒளியமைந்த பற்களையுடைய;ஏனத்தின் வலியின -(திருமாலின் அவதாரமான) வராகம் (பன்றி) போன்ற வன்மை பெற்றனவாகி;வயிரத் திண் கொள் -உறுதியான வலிமை கொண்ட;மால் வரை -பெரிய மலையும்;மயிர்ப் புறத்தன எனத் திரண்ட -ஒரு மயிர்க் காலிலேயடங்கக் கூடுமென்று சொல்லும்படி உருண்டு பருத்த உருவம் கொண்டனவும்;கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியில்-இடம் மிகுதியாகக் கொண்ட இரண்டாயிரங் கோடியாக; கணித்த -கணக்கிடப்பட்டவையுமாகிய;எண்கின் ஈட்டம் கொண்டு - கரடிக்கூட்டத்தை உடன் கொண்டு;இறுத்தான் -வந்து சேர்ந்தான். தூமிரன்: சாம்பவானுக்கு உடன் பிறந்தவன்; ஒரு கரடித் தலைவன். இவனது கரடிப் படையில் ஒவ்வொரு கரடியும் திருமாலின் வராகம்போன்று வலிமையையும், ஒரு மயிர்க் காலில் பெருமலையும் அடங்கக் கூடிய பேருருவத்தையும் உடையன என்பது. 6 4413. | முனியும்ஆம் எனின்அருக்கனை முரண் அற முருக்கும், தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும், இனிய மாக் குருங்கு ஈர் - இரண்டு ஆயிர கோடி |
|