பக்கம் எண் :

தானை காண் படலம் 505

     தரீமுகன்: குகை போன்ற முகத்தையுடையவன் என்பது பொருள்.
வேகரம்: கொடுமை, உக்கிரம், சேனைக்குச் சாகரம் பரப்பும் பெருமையும்
கொந்தளிப்பும் பற்றி வந்த உவமை.                              10

4417. இளைத்து வேறு ஒரு மா
      நிலம் வேண்டும் என்று இரங்க,
முளைத்த முப்பதினாயிர
      கோடியின் முற்றும்,
விளைத்த வெஞ் சினத்து,
      அரிஇனம் வெருவுற விழிக்கும்
அளக்கரோடும், - அக்கயன் எனும்
      பெயரன் - வந்து அடைந்தான்.

     அக்கயன் எனும் பெயரன் -அக்கயன் என்னும் பெயரையுடைய
வீரனும்;வேறு ஒரு மாநிலம் -(தாம் தங்குவதற்க இந்த நிலவுலகம்
போதாமையால்) வேறொரு அகன்ற பூமி;வேண்டும் என்று -வேண்டும்
என்று;இளைத்து இரங்க முளைத்த -வருந்தி மனம் இரங்கும்படி
தோன்றினவும்;முப்பதினாயிர கோடியின் -முப்பதினாயிரங் கோடி என்ற
தொகை கொண்டு;முற்றும் விளைத்த -உலகமெங்கும் பரவி யனவுமான;
வெம் சினத்து அரி இனம் -
கடுமையான கோபமுடைய சிங்கக்
கூட்டங்களும்;வெருவுற விழிக்கும் -அஞ்சுமாறு நோக்குகின்ற;
அளக்கரோடும் -
வானர சேனைக் கடலோடும்;வந்து அடைந்தான் -
வந்து சேர்ந்தான்.

     ஒவ்வொன்றும் மிகவும் பருத்திருப்பதால் அக்கயனது முப்பதினாயிரங்
கோடிச் சேனை தங்குவதற்கு இந்த உலகம் போதாதென்பது கருத்து.
அளக்கர்: கடல். சேனைக்கு உவமையாகுபெயர்.                     11

4418. ஆயிரத்து அறுநூறு கோடியின்
      கடை அமைந்த
பாயிரப் பெரும படை
      கொண்டு, பரவையின் திரையின்
தாய், உருத்து உடனே வர -
      தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன்
      என்பவனும், - வந்து இறுத்தான்.

     தட நெடு வரையை ஏய் -பெரிய உயர்ந்த மலையை ஒத்த;உருப்
புயம் -
வடிவத்தோடு கூடிய தோள்களையுடை;சாம்பன் என்பவனும் -
சாம்பவானும்;பரவையின் திரையின் தாய் -கடலின் அலைகளைப் போலப்
பாய்ந்து;உருத்து -வெகுண்டு;உடனே வர -பின்னே தொடர்ந்து வர;
ஆயிரத்து அறுநூறு கோடியின் -
ஆயிரத்து