பக்கம் எண் :

தானை காண் படலம் 507

 உயர்ந்த வெஞ் சின வானரப்
      படையொடும், ஒருங்கே, -
சயம்தனக்கு ஒரு வடிவு எனத்
      திறல் கொடு தழைத்த
மயிந்தன் - மல்
      கசகோமுகன்தன்னொடும், வந்தான்.   *

     சயம் தனக்கு ஒரு வடிவென -வெற்றியே ஓர் உருக் கொண்டது
என்று கூறும்படி;திறல் கொடு தழைக்க -போர் வன்மையால் உயர்ந்த;
மயிந்தன் -
மயிந்தன் என்னும் வீரன்;மல் கச கோமுகன் தன்னொடும் -
மற்போரில் சிறந்த கச கோமுகன் என்பவனோடும்;இயைந்த பத்து
நூறாயிரம் பத்து எனும் கோடி -
பொருந்திய நூறு லட்சங் கோடி என்ற
எண்ணுள்ள;உயர்ந்த வெம் சின வானரப் படையொடும் -மிகக் கொடிய
சினத்தையுடைய வானர சேனையோடும்;ஒருங்கே வந்தான் -ஒரு சேர
வந்தான்.

     மயிந்தனும் கசகோமுகனும் நூறு லட்சங் கோடி சேனையுடன் வந்தார்கள்
என்பது.  மயிந்தனும் துமிந்தனும் அசுவினி தேவர்களின் அமிசத்தால் பிறந்த
வானரராவர்.                                                  14

4421.கோடி கோடி நூறாயிரம்
      எண் எனக் குவிந்த
நீடு வெஞ் சினத்து அரிஇனம்
      இரு புடை நெருங்க,
மூடும் உம்பரும், இம்பரும்,
      பூமியில் மூழ்க, -
தோடு இவர்ந்த தார்க்கிரி புரை
      துமிந்தனும் - தொடர்ந்தான்.

     தோடு இவர்ந்த தார்க்கிரி புரை -இதழ்கள் அமைந்த மலர்
மாலையை அணிந்தவனும் மலையை ஒத்தவனுமான;துமிந்தன் -துமிந்தன்
என்னும் வீரனும்;கோடி கோடி நூறு ஆயிரம் எண் எனக் குவிந்த -பல
கோடி இலட்சக் கணக்காக நிறைந்த;நீடு வெஞ்சினத்து அரி இனம் -மிகக்
கொடிய கோபத்தையுடைய வானரக் கூட்டம்;இரு புடை நெருங்க -இரு
பக்கங்களிலும் நெருங்கி வரவும்;மூடும் உம்பரும் -பூமியின்மேல் கவிந்த
ஆகாயமும்; இம்பரும் பூமியில் மூழ்க -இவ் வுலகமும் (அச்சேனைகள்
வரும் போது எழும்) புழுதியில் மறைந்து விடவும்;தொடர்ந்தான் -பின்
வந்தான்.

     வீடணன் இராமனிடம் சரண்புக வருகையில் அவனை முதன் முதலாக
எதிர்கொண்டவர்கள் இவ்விருவருமேயாவர்.                          15