பக்கம் எண் :

516கிட்கிந்தா காண்டம்

வாடிய இராமனிடம் புதிய தென்பு பிறந்தது என்பதைக் குறிப்பாகப்
புலப்படுத்துகிறது 'தளிர்ப்பான்' என்ற சொல்லாட்சி. தளிரே மரம் செடிகளின்
எதிர்கால வளத்தைப் புலப்படுத்துமன்றோ? சேனைப் பரப்பு முழுவதும
காண்பதற்கு ஒரு மலைச் சிகரமே பொருந்துமென்பது கவிஞர்குறிப்பு.  29

4436. அஞ்சோடு ஐ - இரண்டு யோசனை
      அகலத்தது ஆகி,
செஞ்செவே வட திசைநின்று
      தென் திசை செல்ல,
எஞ்சல் இல் பெருஞ் சேனையை,
      'எழுக' என ஏவி,
வெஞ் சினப் படை வீரரை
      உடன் கொண்டு மீண்டான்         *

     அஞ்சொடு ஐ இரண்டு யோசனை -பதினைந்து யோசனைப்
பரப்பளவு;அகலத்தது ஆகி -அகலம் உடையதாய்;செஞ்சேவே -நேராக;
வடதிசை நின்று -
வடக்கிலிருந்து;தென்திசை செல்ல -தெற்கு நோக்கிச்
செல்வதற்கு;எழுக என -புறப்படுக என்று;எஞ்சல் இல்
பெருஞ்சேனையை -
குறைவற்ற பெரிய வானரப் படையை;ஏவி -ஏகுமாறு
கட்டளையிட்டு;வெஞ்சினப் படை வீரரை உடன் கொண்டு -கொடிய
சினம் உள்ள வானரப்படைத் தலைவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துக்
கொண்டு;மீண்டான் -சுக்கிரீவன் இராமனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தான்.

     படை நடைபோட்டுச் செல்லும்போது இராமபிரான் ஒரே இடத்திலிருந்து
பார்ப்பதற்குச் சுக்கிரீவன் ஏற்பாடு செய்ததை இப்பாடல் புலப்படுத்துகின்றது.
எழுக + என = எழுகென: (அகரம்) தொகுத்தல்விகாரம்.               30

சுக்கிரீவன் இராமனுக்குத் தானையை வரன்முறைப்படி காட்டுதல்

4437. மீண்டு, இராமனை அடைந்து,
      'இகல் வீரருள் வீர!
காண்டி, நீ' என்று,
      வரன்முறை தெரிவுறக் காட்டி,
ஆண்டு இருந்தனன்; ஆர்த்து
      உருத்து எழுந்ததையன்றே,
ஈண்டு சேனை, பால் எறி
      கடல் நெறி படர்ந்தென்ன.    *

     (சுக்கிரீவன்)மீண்டு இராமனை அடைந்து -திரும்பவும் இராம னிடம்
வந்து (அவனை நோக்கி); 'இகல் வீரருள் வீர -வலிமை பொருந்திய
வீரர்களுள்ளே சிறந்த வீரனே!நீ காண்டி என்று -நீ காண்பாய் என்று;
வரன் முறை தெரிவுறக் காட்டி -
சேனைகளை