பக்கம் எண் :

தானை காண் படலம் 517

முறையாகத் தெரியும்படி (அவனுக்குக்) காண்பித்து;ஆண்டு இருந்தனன் -
அந்த இடத்தில் இருந்தான் (அப்போது);ஈண்டு சேனை -திரண்ட அந்த
வானர சேனையானது;எறி பாற் கடல் -அலை வீசுகின்ற பாற்கடல்;நெறி
படர்ந்து என்ன -
வழியில் சென்றது போல;ஆர்த்து உருத்து எழுந்தது -
பேராரவாரம் செய்து (பிறர்க்கு) அச்சம் உண்டாகப் புறப்பட்டது.

     சுக்கிரீவன் வானரப் படைகளன் வரலாறுகளை இராமனுக்குச்
செம்மையாக விளங்கச் சொன்னான் என்பது.

     வானரப் படைக்குப் பாற்கடல் உவமை: நிறத்தாலும் ஆரவாரத்தாலும்
பாற்கடல் அலைகள் வானர சேனைக்கு உவமையாயின. ஐயரவர்கள் நூலகப்
பதிப்பில் இப்பாடல் இடம் பெறவில்லை.                            31

வானரப் படையின் பெருக்கம்

4438.எட்டுத் திக்கையும், இரு
      நிலப்பரப்பையும், இமையோர்
வட்ட விண்ணையும், மறி
      கடல் அனைத்தையும், மறையத்
தொட்டு மேல் எழுந்து
      ஓங்கிய தூளியின் பூமி,
அட்டிச் செம்மிய நிறை குடம்
      ஒத்தது, இவ் அண்டம்.

     எட்டுத் திக்கையும் -எட்டுத் திசைகளையும்;இரு நிலப்
பரப்பையும்-
பெரிய பூமியின் விரிந்த இடம் முழுவதையும்;இமையோர்
வட்டவிண்ணையும் -
தேவர்கள் வாழ்கின்ற வட்டவடிவமான மேலுலகத்
தையும்;மறிகடல் அனைத்தையும் -அலைகள் வீசும் ஏழு கடல்களையும்;
மறைய- மறையும்படி;தொட்டு மேல் எழுந்து ஓங்கிய -தரையிலிருந்து
மெலெழுந்து பரந்த;தூளியின் -(படைகளின்) புழுதியால்;இவ் அண்டம் -
இந்த அண்ட கோளமானது;பூழி அட்டிச் செம்மிய -புழுதியை இட்டு
மூடிய;நிறை குடம் ஒத்தது -நிறை குடத்தை ஒத்திருந்தது.

     புழுதியால் நிறைந்த நிறைகுடத்தைத் தூளியால் நிரம்பிய அண்ட
கோளத்திற்கு உவமையாக்கினார்.

     தன்மைத் தற்குறிப்பேற்றவுவமையணி.                        32

4439. அத்தி ஒப்பு எனின்,
      அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம்
      உவமை வேறு யாதோ?