| பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பர், எத் திறத்தினூம் நடுவு கண்டிலர், முடிவு எவனோ? |
அத்தி ஒப்பு எனின் -(இச் சேனைத் தொகுதிக்கு) கடல் நிகராகு மென்று கூறினால்;அன்னவை உணர்ந்தவர் உளர் -அக் கடல்களின் அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள் (இச் சேனையின் பரப் பைக் கண்டவர்கள் இல்லை);இனி வித்தகர்க்கு -இனிமேல் அறிவு டையவரால்; உரைக்கல் ஆம் உவமை -(இச் சேனைக்கு) எடுத்துக் கூறும் உவமை; வேறு யாதோ -வேறு யாது உள்ளது (எதுவுமில்லை); பத்து இரட்டி நன்பகல் இரவு -இருபது நாட்கள் பகலிலும் இரவிலும்;ஒருவலர் பார்ப்பார்-இடைவிடாமல் பார்ப்பவராகிய இராமலக்குவர்;எத் திறத்தினும் -எவ்வகையாலும்;நடுவு கண்டிலர் -(இச் சேனையின்) நடுவையும்காணாதவராயினர்;முடிவு எவனோ -(அவ்வாறானால்) இதன் முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ? அறிவாளிகளான இராமஇலக்குவர் இருபது நாள் அல்லும் பகலும் இடை விடாமல் பார்த்து இச் சேனையின் நடுவெல்லைக் கூடக் காணாதவராயினர். அப்படியிருக்க, இனி இதன் முடிவெல்லையை யாரால் காண முடியும் என்றவாறு. அத்தி - கடல். 33 படையைக் குறித்து இராமலக்குவர் உரையாடல் 4440. | விண்ணின் தீம்புனல் உலகத்தின், நாகரின், வெற்றி எண்ணின், தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன், கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி, அண்ணல் - தம்பியை நோக்கினன், உரைசெய்வதானான்: |
வெற்றி எண்ணில் -வெற்றி பெறுவதைப் பற்றி ஆராய்ந்தால்;தான் அலது -தானே தனக்கு உவமையாவது அல்லாமல்;விண்ணில் - மேலுலகத்திலும்;தீம்புனல் உலகத்தில் -இனிய கடல் சூழ்ந்த உலகத்திலும்; நாகரின் - நாகர்கள் வாழும் பாதாள உலகத்திலும்;ஒப்பு இலன் என - உவமையில்லாதவன் எனச் சொல்லுமாறு;நின்ற இராமன் -(சிறப்போடு) விளங்கும் இராமன்;கண்ணின் -தன் கண்களாலும்;சிந்தையின் - மனத்தினாலும்;கருதி -அந்தச் சேனைப் பாப்பை நன்றாக ஆராய்ந்து; அண்ணல் தம்பியை நோக்கினன் - |