| பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, - வாச மாலையாய்! - யாவரே முடிவு எண்ண வல்லார்? |
வாச மாலையாய் -மணம் நிறைந்த மாலையை அணிந்தவனே!ஈசன் மேனியை -இறைவனின் திருமேனியையும்;ஈர் ஐந்து திசைகளை -பத்துத் திக்குகளையும்;ஐம்பெரும் பூதத்தை -ஐந்த பெரிய பூதங்களையும்;அறிவை -நுட்பமான அறிவையும்;பேசும் பேச்சினை -பேசும் மொழிகளையும்; சமயங்கள் பிணக்குறும் பிணக்கை -தமக்குள் சமயங்கள் மாறுபடுகின்ற மாறுபாட்டையும்;ஈண்டு இவ் ஆசு இல் சேனையை - இங்கே திரண்டுள்ள குற்றமற்ற இவ்வானரப் படையையும்;யாவரே முடிவு எண்ண வல்லார் - எவர்தாம் அவற்றின் முடிவைக் கணக்கிட வல்லவர்? உபமேயமாகிய சேனையையும் உவமானமாகிய ஈசன்மேனி முதலியவற்றையும் ஒருங்கே ஒரு பொதுத் தன்மையைக் கொண்டு முடியுமாறு கூறப்பட்டுள்ளது. இறைவன் எங்குமுள்ளவனாதலால் அவனது திருமேனி அளவிட்டு அறிய முடியாதது; ஐம்பெரும் பூதங்கள் உலக முழுவதும் நிம்பியிருத்தலால் அவற்றிற்கும் ஓர் அளவு இல்லை;புதிது புதிதாகப் பொருள்களை அறியும் அறிவுக்கும் ஓர் எல்லையில்லை; ஒருவர் ஒன்று பேசும்போது அதனைத் தொடர்ந்து பேசு இடம் உண்டாதலால் அதற்கும் ஓர் அளவில்லை. தன் தெய்வம் என் தெய்வம் என்று பேசிச் சழக்கிடும் சமய வாதங்களுக்கும் முடிவில்லை. இவற்றைப் போலவே வானரப் படையின் அளக்கமுடியாத நிலை இங்கே காட்டப்பெற்றுள்ளது. 36 4443. | 'இன்ன சேனையை, முடிவுற இருந்து இவண் நோக்கி, பின்னை காரியம் புரிதுமேல், நாள் பல பெயரும்; உன்னி, செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி' என்ன - வீரனைக் கைதொழுது, இளையவன் இயம்பும்: |
இன்ன சேனையை -இத்தகைய படையை;இவண் இருந்து முடி வுற நோக்கி -இங்கேயிருந்து முழுவதும் நன்றாகப் பார்த்து;பின்னை -அதன் பின்பு;காரியம் புரிதுமேல் -(நமது) செயலைச் செய்யத் தொடங்குவோமானால் (இதைப் பார்த்து முடிவதற்குள்);நாள் பல பெயரும் - பல நாட்கள் கழிந்து விடும்;உன்னி -(ஆகவே இனிச் செய்ய வேண்டியவற்றை) நன்றாக ஆராய்ந்து;செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி -செய்யவேண்டிய செயலில் மனம் ஒன்று பட்டுச் செய்ய முற்படுவதே நன்மை தருவதாகும்;என்ன -என்று (இராமன் |