கூற);இளையவன் -இலக்குவன்;வீரனைக் கை தொழுது இயம்பும் - இராமனை வணங்கிக் கூறலானான். தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால் (7382) என்றும் கும்பகருணனின் உருவத் தோற்றம் வருணிக்கப்பட்டதை இங்கு ஒப்பிட்டுணரலாம். 37 4444. | 'யாவது எவ் உலகத்தினின், இங்கு, இவர்க்கு இயற்றல்- ஆவது ஆகுவது; அரியது ஒன்று உளது எனல் ஆமே? - தேவ! - தேவியைத் தேடுவது என்பது சிறிதால்; பாவம் தோற்றது, தருமமே வென்றது, இப்படையால். |
தேவ -தேவனே!இங்கு இவர்க்கு -இங்குள்ள வானர வீரர்களுக்கு; எவ் உலகத்தினின் -எந்த உலகத்தில்;யாவது இயற்றல் ஆவது -எதைச் செய்து முடிக்கவேண்டியதிருந்தாலும்;ஆகுவது ஆவது -அச்செயல்கள் எளிதில் கைகூடிவிடும்;அரியது ஒன்று -(அவ்வாறாக இவர்களுக்குச் செய்வதற்கு) அரிய செயல்;உளது எனல் ஆமே -உள்ளது என்று சொல்வதற்கு இடமுண்டோ? தேவியைத் தேடுவது என்பது -சீதையைத் தேடிக் கண்டு பிடிப்பதென்பது;சிறிது -(இவர் களது பேராற்றலுக்கு) மிகவும் எளிதான செயலாகும்;இப்படையால் -இந்தச் சேனையால்;பாவம் தோற்றது-பாவம் தோல்வியடைந்தது;தருமமே வென்றது -தருமமே வெற்றிபெற்றது. எந்த உலகத்தில் எச் செயல் செய்யவேண்டுமானாலும் இவர்களுக்கு எளிதில் செய்ய முடியுமென்பது. நல்லறத்தின் வழி நிற்கும் நமக்கு இச் சேனை கிடைத்தது பாவம் அழிவதற்கும் தருமம் தழைப்பதற்கும் ஓர் அறிகுறி என்றான் இலக்குவன். 38 4445. | 'தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த வரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள், உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் குரங்கின் மாப் படைக்கு, உறையிடப் படைத்தனன்கொல்லாம்? |
தரங்க நீர் எழு -அலைகள வீசும் நீரில் முளைக்கும் இயல்புள்ள; தாமரை நான்முகன் -தாமரை மலரின் உதித்த பிரமன்;தந்த - |