பக்கம் எண் :

524கிட்கிந்தா காண்டம்

     தலைவன் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுதலன்றி வேறு ஆய்வு
மேற் கொள்ளுதல் படைவீரர்களுக்கு இல்லை என்ற கருத்தினை 'வகை. . .
இன்றி' என்ற தொடர்பு புலப்படுத்திற்று.  வகையும் மானமும் பகையும் இன்றி
எனக் கூட்டிப் பொருள் கொள்க.  வகைதல் - ஆராய்தல்.  'நகர் நீ
தவிர்வாய்' எனவும் வகையாது தொடர்ந்து' என்ற தொடரில் 'வகையாது' என்ற
சொல் 'ஆராயாமல்' என்ற பொருளில் வந்தது.  மானம் - ஒப்புமை. வகையும்
மானமும் பகையும் என்ற எண் ணும்மைச் சொற்கள் 'இன்றி' என்னும்
வினையெச்சம் கொண்டு முடிவதாகப் பாடல் அமைந்துள்ளதுகாண்க.     1

4448.'   ''ஏற்ற வெள்ளம் எழுபதின்
      இற்ற'' என்று
ஆற்றலாளர் அறிவின்
      அமைந்தது ஓர்
மாற்றம் உண்டு; அது
      அல்லது, மற்றும் ஓர்
தோற்றம் என்று இதற்கு
      எண்ணி முன் சொல்லுமோ?

     (அதுகேட்ட சுக்கிரீவன் இராமனை நோக்கி);ஏற்ற வெள்ளம்
எழுபதின் இற்ற என்று -
(இந்த வானர சேனையின் அளவு) எழுபது
வெள்ளம் என்னும் அளவால் அமைந்திருக்கின்றது என்று;ஆற்றலாளர்
அறிவின் அமைந்தது -
வல்லவருடைய அறிவினால் ஆராய்ந்து கண்ட
தாகிய;ஓர் மாற்றம் உண்டு -ஒரு வார்த்தை உள்ளது;அது அல்லது -
(அந்த வார்த்தை) அல்லாமல்;இதற்கு -இச் சேனைக்கு;மற்றும் ஓர்
தோற்றம் என்று -
வேறான ஒரு முடிவெல்லையுண்டு என்று;எண்ணி முன்
சொல்லுமோ -
ஆராய்ந்து சொல்ல இயலுமோ? (இயலாது).

     இச் சேனையின் தொகுதி பற்றி்ப் பெரியோர் எழுபது வெள்ளம் என்று
கூறியதை உடன்படிவேண்டும்; மாறாக யாராலும் இவ்வளவென்று கணக்கிட்டுக்
கூறுவது எவ்வாற்றாலும் இயலாது என்க.                             2

4449.'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன்
கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன்' என்று ஓதினான்.

     அனீகருக்கு -இச் சேனையிலுள்ள வானரங்களுக்கு;ஏறு கொற்றத்
தலைவர் -
சிறந்த வெற்றியையுடைய தலைவர்கள்;ஆறு பத்து எழு
கோடி-
அறுபத்தேழு கோடிக் கணக்கான;இவர்க்கு முன் கூறு
சேனைப்பதி -
இப் படைத் தலைவர்களுக்கும் முதலாகச் சொல்லப்பட்ட
தலைமைப் படைத்தலைவனானவன்;கொடுங் கூற்றையும் -கொடிய
யமனையும்;நீறுசெய்திடும் நீலன் -சாம்பலாக்கவல்ல வலிமையுள்ள