பக்கம் எண் :

நாட விட்ட படலம் 527

இவ்வாறு உணர்த்துகின்றது;மாருதி -அனுமானே!இனி வன திசைக்கு -
இப்போது வலிய அந்தத் திசைக்குச் (சென்று);வென்று -அங்குள்ள
அரக்கரை வெற்றி கொண்டு;இசைக்கு உரியார் -புகழ் பெறத்
தகுதியுள்ளவர்;நீ அலால் பிறர் வேண்டுமோ -நீ ஒருவனே யல்லாமல்
வேறொருவரும் வேண்டுமோ?

     'இராவணன் நகராகிய இலங்கை தென் திசையிலிருப்பதாக எனக்கு
நினைவு; நீ ஒருவனே அத் தென்திசைக்குச் சென்று இராவணனது
இலங்கையைக் கண்டு அங்குள்ள அரக்கரை வென்று சீதையின் செய்தியை
அறிந்து வந்து சொல்லிப் புகழ் பெறுவதற்குத் தகுதியுடையாய்' என்று
சுக்கிரீவன் அனுமனிடம் கூறினான்.

     இன்னணம் - (இன்னவண்ணம்) தொகுத்தல் விகாரம்.
எல்லாவுயிர்களையும் கவரும் யமன் திசையானதாலும், வீரம் மிக்க இராவணன்
அங்கு ஆட்சி புரிவதாலும் தென்திசை வன்திசைஎனப்பட்டது.          7

4454.'வள்ளல் தேவியை
      வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன்
      செலக் கண்டது,
தெள்ளியோய்! ''அது தென்
      திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு''
      என உன்னுவாய்.

     தெள்ளியோய் -தெளிவான அறிவுள்ளவனே! வள்ளல் தேவியை -
சிறந்த கொடியாளனான இராமனின் மனைவியாகிய சீதையை;வஞ்சித்து
வௌவிய -
வஞ்சனையால் கவர்ந்து சென்ற;கள்ள வாள் அரக்கன் -
கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்;செலக் கண்டது
அது -
போகக் கண்டதான அந்தத் திசை;தென்திசை என்பது -தெற்குத்
திக்காகும் என்பதாகிய;ஓர் உள்ளமும் -ஒரு நினைவும்;எனக்கு உண்டு -
என்னிடம் தோன்றுகிறது;என உன்னுவாய் -என்று நீ கருதுவாய்.

     கண்டது - சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக்
கண்டது.                                                       8

4455.'தாரை மைந்தனும், சாம்பனும், தாம் முதல்
வீரர் யாவரும், மேம்படும் மேன்மையால்
சேர்க நின்னொடும்; திண் திறல் சேனையும்,
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால்.

     தாரை மைந்தனும் -தாரையின் மகனான அங்கதனும்;சாம்பனும் -
(கரடிகளுக்கு அரசனான) சாம்பவானும்;முதல் வீரர் யாவரும் -