பக்கம் எண் :

528கிட்கிந்தா காண்டம்

முதலாகிய வீரர் பலரும்;மேம்படும் மேன்மையால் -மிகுந்த
பெருமையோடு;நின்னொடும் சேர்க -உன்னுடன் வரட்டும்;வெள்ளம்
இரண்டொடும் -
இரண்டு வெள்ளம் என்னும் அளவுடனே;திண் திறல்
சேனைகள் -
மிக்க வலிமையுள்ள சேனைகள்;பெற்றியால் பேர்க -
பெருமையோடு (உங்களுக்கு உதவியாகப்) புறப்படட்டும் (எனக்கூறி)

     அங்கதன், சாம்பவான் ஆகியோரோடும், இரண்டு, வெள்ளம் வானர
சேனையோடும் புறப்பட்டுச் சீதையைத் தேட நீ தென்திசை செல்வாயெனச்
சுக்கிரீவன் அனுமனுக்கு ஆணையிட்டான் என்பது.  திண்திறல்: ஒரு
பொருட்பன் மொழி. தாம் - அசை.                               9

ஏனைத் திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புதல்

4456.'குட திசைக்கண், சுடேணன்;
     குபேரன் வாழ்
வட திசைக்கண்,
      சதவலி; வாசவன்
மிடல் திசைக்கண்,
      வினதன்; விறல் தரு
படையொடு உற்றுப் படர்க'
      எனப் பன்னினான்.

     குடதிசைக் கண் -மேற்குத் திசையில்;சுடேணன் -இடபனும்;
குபேரன் வாழ் வடதிசைக்கண் -
(திக்குப் பாலகனான) குபேரன் வாழுகின்ற
வடக்குத் திசையில்;சதவலி -சதவலி என்னும் தலைவ னும்;மிடல் வாசவன்
திசைக்கண் -
வலிமைக்கொண்ட இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில்; வினதன்
-
வினதனும்;விறல்தரு படையொடு -வலிமை மிக்க சேனையோடு;உற்றுப்
படர்க -
சேர்ந்து செல்வாராக;எனப் பன்னினான் -என்று கூறினான்.

     குபேரன்: விச்சிரவசு என்னும் முனிவனுக்கு மூத்த மனைவியான பரத்து
வாச மகளிடம் பிறந்த மகனாவான்.

     வாசவன்: வசுக்களுக்குத் தலைவன். படர்கென - (அகரம்) தொகுத்தல்
விகாரம். (படர்க + என)                                        10

ஒரு திங்களுக்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல்

4457.வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி
முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை;
கொற்ற வாகையினீர்!' எனக் கூறினான்.